இனி இவர்களுக்கு 'எச்1பி விசா' அப்ளை செய்யப்போவதில்லை.. இன்போசிஸ் நிர்வாகத்தின் திடீர் முடிவு..!
பெங்களுரூ: நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ், எச்1பி விசாவில் விதிக்கப்பட்ட கடுமையான விதிமுறைகள் எதிரொலியாக நிறுவனத்தில் பல மாற்றங்களைச் செய்து வருகிறது.
இதன் படி, இனி நிறுவனத்தில் ஒரு பிரிவை சார்ந்தவர்களுக்கு எச்1பி விசா விண்ணப்பிக்கப்பட மாட்டாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்கள்
இன்போசிஸ் மட்டும் அல்லாமல் இந்திய ஐடி நிறுவனங்கள் அனைத்தும், தங்களது லாபத்தை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்தவும் அதிகளவில் வொர்க் விசாவை நம்பி இயங்கி வந்தது.
அமெரிக்காவில் புதிதாக அமைந்துள்ள டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு விசா கட்டுப்பாடுகள், விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ள நிலையில், தங்களது வர்த்தக வடிவத்தையும், இயங்கும் வடிவத்தையும் மாற்றியமைத்து வருகிறது இந்திய ஐடி நிறுவனங்கள்.
இதன் வாயிலாகவே தற்போது இன்போசிஸ் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இன்போசிஸ்
இனி இன்போசிஸ் நிர்வாகம் 4 வருடம் குறைவாக அனுபவம் கொண்ட ஊழியர்களுக்கு விசா விண்ணப்பிக்காது.
மேலும் தற்போது அமெரிக்காவில் இருக்கும் வாடிக்கையாளர்களிடம் இனி அதிகளவிலான பணிகளை ஆப்ஷோரில் வைத்தே செய்யவும், அமெரிக்காவில் இருக்கும் ஜூனியர் பணியாளர்களை இந்திய அலுவலர்களுக்குக் கொண்டு வரவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இன்போசிஸ் நிர்வாகத் தலைவர் ஒருவர் கூறினார்.
சிஸ்டம் இன்ஜினியர்
இன்போசிஸ் நிறுவனத்தில் சிஸ்டம் இன்ஜினியர், சீனியர் சிஸ்டம் இன்ஜினியர் பதவிகளில் இருக்கும் ஊழியர்களுக்கு விசா விண்ணப்பிக்கப்பட மாட்டாது என இன்போசிஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் பதவிகளில் இவை இரண்டுமே ஆரம்பப் பதவிகளாகும்.
குறைந்தபட்சம் சம்பளம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதன் உறுப்பினர், அமெரிக்க ஊழியர்களுக்கு இணையாக எச்1பி விசா பெறும் ஊழியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச அடிப்படை சம்பள அளவு 1,30,000 அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும் என்ற மசோதாவை சமர்ப்பித்தார்.
இது தற்போதைய அளவுகளைவிடவும் இரண்டு மடங்கு அதிகமாகும்.
இன்போசிஸ்
இதனால் அதிக வொர்க் விசாவை கொண்டு அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு மென்பொருள் சேவை அளிக்கும் நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது.
இதன் காரணமாகவே இன்போசிஸ் தற்போது இத்தகைய முடிவை எடுத்துள்ளது.
வாடிக்கையாளர் திட்டம்..
இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் பல இந்திய ஊழியர்கள் தற்போது தாயகம் திரும்பு நிலையில் இன்போசிஸ் அதன் அமெரிக்க வாடிக்கையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அமெரிக்கக் கல்லூரிகளில் இருந்து மாணவர்களை நேரடியாகப் பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது.
150 வேலைவாய்ப்புகள்
இன்போசிஸ் லிங்க்டுஇன் தளத்தில் கடந்த ஒரு மாத்தில் மட்டும் அமெரிக்கச் சந்தையில் மட்டும் சுமார் 150 வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. இதில் பெரும்பாலான பணிகள் 2 வருட அனுபவம் சார்ந்த பணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ்
இந்நிலையில் நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ், இந்த வருடம் தனது சராடரி எண்ணிக்கையில் வெறும் 15 சதவீதம் தான் விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பிற ஐடி நிறுவனங்கள்
இன்போசிஸ், டிசிஎஸ் மட்டும் அல்லாமல் விப்ரோ, எச்சிஎல், மைண்டுடிரீ போன்ற நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்திலும் இதேபோன்ற நிலை தான்.
சிடிஎஸ்..
காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் ஊழியர்களின் குறைந்த திறன் அல்லது பொருத்தமில்லா திறன் காரணமாக 6,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் இந்நிறுவனத்தின் 2-3 சதவீத ஊழியர்களைக் குறைக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது சிடிஎஸ்.
தொடர் பணிநீக்கம்
2 வருடங்களுக்கு முன்பு சிடிஎஸ் நிறுவனம் 1 சதவீதமும், 201ஆம் நிதியாண்டில் 2 சதவீதம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.
மார்ச் 31, 2017 ஊழியர்களின் தகுதி ஆய்வுகள் முடிவுகள் வெளியான பின்பே எத்தனை சதவீத ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது தெரிய வரும் எனத் தகவல் கிடைத்துள்ளது.
75 சதவீத ஊழியர்கள்
டிசம்பர் 2016 முடிவடைந்த காலாண்டில், இந்த அமெரிக்க நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனத்தில் 2.60 லட்ச ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 75 சதவீத ஊழியர்கள் இந்திய சந்தையில் இருக்கும் அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனர்.
வேலையில்லா திண்டாட்டம்
முதல் முறையாக..!
#SunTv #chennai
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications