ஏர் ஏசியாவின் இந்தச் சலுகை விலை டிக்கெட்களைப் பெற மின்கூட்டியே விமான டிக்கெட்களைப் புக் செய்ய வேண்டும். 2017 ஆகஸ்ட் 31 வரை பயணம் செய்வதற்கான விமான டிக்கெட்களை 2017 மார்ச் 26-ம் தேதி வரை புக் செய்யலாம்
எர்ஏசியா இந்தியா கோடைக்காலச் சலுகை ஆஃபராக 1,399 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது. ஏர்ஏசியாவின் இந்தச் சலுகை திட்டத்தின் மூலம் பெங்களூரு, ஹைதராபாத், கோவா, கவுகாத்தி, டெல்லி, கொச்சி மற்றும் புனே உள்ளிட்ட வழித்தடங்களில் பயணம் செய்யலாம்.
கோடைக்கால விடுமுறை விரைவில் வர இருக்கும் நிலையில் ஏர் இந்தியா, இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமான நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்தச் சலுகை விலை விமான டிக்கெட்டை ஏர் ஏசியா அறிவித்துள்ளது.
ஏர் ஏசியாவின் இந்தச் சலுகை விலை டிக்கெட்களைப் பெற மின்கூட்டியே விமான டிக்கெட்களைப் புக் செய்ய வேண்டும். 2017 ஆகஸ்ட் 31 வரை பயணம் செய்வதற்கான விமான டிக்கெட்களை 2017 மார்ச் 26-ம் தேதி வரை புக் செய்யலாம்.
1,399 ரூபாய் ஆஃபர் உள்ள வழித்தடம்
ஏர் ஏசியா விமான டிக்கெட் ஆஃபர் விலையில் ஒரு வழி பயணமாகப் பெங்களுரில் இருந்து ஹைதராபாத் செல்ல 1399 ரூபாய் என அனைத்தும் உள்ளடக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்தில் கிடைக்கும்.
பிற வழித்தடங்கள்
கவுகாத்தியில் இருந்து இம்பால் செல்ல 1,699 ரூபாயும், ஹைதராபாத் - கொச்சி செல்ல1,899 ரூபாயும், ஹைதராபாத் - கோவா செல்ல 2,099 ரூபாயும், பெங்களூரு - கோவா செல்ல 1,799 ரூபாயும் ஆஃபர் என்ன ஏர் ஏசியா இந்தியா இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு வழி பயணம் மட்டுமே
எல்லா விமான டிக்கெட்களும் ஒரு வழிப் பயணத்திற்கு மட்டுமே என்றும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்றும், டிக்கெட் கட்டணத்தில் விமான நிலையம் வரியும் அடக்கம் என்று ஏர் ஏசியா கூறியுள்ளது.
வெளிநாட்டு விமான டிக்கெட்கள் ஆஃபர்
பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, டெல்லி மற்றும் வைசாக் உள்ளிட்ட இடங்களில் இருந்து பாங்காக் மற்றும் கோலாலம்பூர் செல்ல செப்டம்பர் மாத வரை பயணம் செய்யக்கூடிய விமான டிக்கெட்களுக்கு 50 சதவீதம் வரை ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஏப்ரல் 2 வரை இந்தச் சலுகை விலையில் டிக்கெட்களைப் புக் செய்து 100 வழித்தடங்களுக்குச் சென்று வரலாம் என்றும் ஏர் ஏசியா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications