பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலமாக 2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் விடு இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் மத்திய அரசு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் வீடு திட்டமான பிராதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ஆண்டு வருமானம் மற்றும் கடன் தொகை வரம்பு உள்ளிட்டவையில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
3 சதவீதம் மானியம்
அந்தத் திருத்தப்பட்ட விதிகளின் படி நகரத்தில் வாழ்பவர்களின் ஆண்டு வருமானம் 18 லட்சமாக உள்ளவர்களுக்கு 12 லட்சம் மதிப்புள்ள கடன் தொகையில் 3 சதவீதம் வரை மானியம் அளிக்கப்பட்டுள்ளது.
4 சதவீதம் மானியம்
ஆண்டு வருமானம் 12 லட்சமாகவும் 9 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கு 4 சதவீதம் வரையிலும் மானியம் வழங்கப்படும்.
6.5 சதவீத வட்டி
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தைச் செயற்படுத்தும் முகவரான குடும்பஸ்ரீ ஏற்கனவே 6.5 சதவீத வட்டி விகிதத்தில் 6 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு 6 லட்சம் ரூபாய்க்கான கடனை அளித்து வருகின்றது.
குடும்பஸ்ரீ
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜான திட்டத்தின் இந்தப் புதிய திட்டமும் குடும்பஸ்ரீயின் கீழ் இணைக்கப்பட இருக்கின்றது. ஆண்டு வருமானம் உயர்வு மற்றும் கடன் தொகை உயர்வு போன்றவற்றைக் குடும்பஸ்ரீயின் பத்திரிகை குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
கடன் தவனைக் காலம்
இந்தக் கடன் தொகையைத் திருப்பி அளிக்கக் கூடிய வரம்புக் காலம் 20 ஆண்டுகளாகும். வங்கிக் கடனை புதிய வீடு கட்டுவது, வீடு வாங்குவது போன்றவற்றுக்குப் பெற முடியும் மற்றும் ஏற்கனவே உள்ள வீட்டைப் புதுப்பிக்க ஏற்கப்படாது.
அரசு அதிகாரிகள்
மானியம் நலன்கள் அரசு அதிகாரிகள் யாரெல்லாம் வருமான வரி செலுத்துகின்றார்களோ அவர்களும் பெறலாம். ஹட்கோ, தேசிய வீட்டுவசதி வங்கி உள்ளிட்டவை மத்திய அரசின் முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ளன. மத்திய நோடல் முகவர்களுக்கு ஒப்பந்தத்திற்காக வரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்பட்டபிறகு வங்கிகள் கடன் அளிக்கும்.
அனைவருக்கும் வீடு
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலமாக 2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் விடு இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் மத்திய அரசு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications