இனி வருமான வரி தாக்கல் செய்ய மற்றும் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம்..!
இனி வருமான வரி தாக்கல் செய்ய மற்றும் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம்..!
மத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்ய மற்றும் நிரந்தரக் கணக்கு எண்ணான பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டையைக் கட்டாயம் என அறிவித்துள்ளது.
இதற்கான திட்டம் நிதி மசோதா 2017-ன் கீழ் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மக்களவை தாக்கல் செய்துள்ளார்.

வருமான வரி தாக்கல் செய்ய ஏற்கனவே பான் எண் அவசியம் என்று இருக்கும் நிலையில் இப்போது 12 இலக்க ஆதார் எண்ணும் வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆதார் கார்டு தரவில் பயோமெட்ரிக் மூலமாகக் கைவிரல் ரேகை மற்றும் கருவிழி போன்றவை ஸ்கேன் செய்யப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதா குறித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மக்களவையில் பேசும் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதனைத் தேவையில்லாதது என்றும் விமர்சித்தனர்.


Click it and Unblock the Notifications