ஐடி வேலை கிடைப்பதில் மேலும் சிக்கல்..! மாணவர்களே உஷார்..!

ஐடி வேலை கிடைப்பதில் மேலும் சிக்கல்..! மாணவர்களே உஷார்..!

இந்தியாவில் உள்ள பல புதிய பொறியியல் பட்டதாரிகளுக்குக் கை கொடுப்பது என்றால் அது கேம்பஸ் இண்டர்வியூவ் என்று கண் முட்டிக்கொண்டு சொல்லலாம். அதற்குச் சிறந்த உதாரணம் கேம்பஸ் இண்டர்வியூக்களில் தேர்வாகாத மாணவர்கள்.

இப்போது கேம்பஸ் இண்டர்வியூவ் மூலம் தேர்வாகும் மாணவர்களுக்கும் புதிய சிக்கல் உருவாகியுள்ளது. இந்திய ஐடி நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் எடுப்பதைக் குறைத்துக் கொண்டே வருகின்றன.

ஐடித் துறை நன்கு வளர்ச்சியாக இருந்த போது ஆண்டுக்குக் குறைந்தது 1,50,000 ஊழியர்கள் கேம்பஸ் இண்டர்வியூவ் மூலமாகத் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இது இப்போது 2017-ம் ஆண்டு அதிகளவு குறைந்துள்ளது என்று கூறலாம்.

குறைய இருக்கும் வேலைவாய்ப்புகள்

குறைய இருக்கும் வேலைவாய்ப்புகள்

2017-ம் ஆண்டு 65,000 முதல் 90,000 பேருக்கு மட்டுமே கேம்பஸ் இண்டர்வியூவ் மூலம் வேலைக் கிடைக்கும் என்று பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹண்டர்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநருமான கிரிஷ் லக்‌ஷ்மி காந்த் கூறுகிறார்.

ஹண்டர்ஸ் இந்தியா பெங்களூரு சார்ந்த ஆட்சேர்ப்புச் சேவைகள் வழங்குநர் நிறுவனமாகும். கிரிஷ் லக்‌ஷ்மி காந்த் இது குறித்துக் கூறுகையில் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 15 முதல் 20 சதவீதம் வரை கேம்ப்பஸ் இண்டர்வியூவ் மூலம் வேலைக்கு ஆட்கள் எடுப்பது குறையும் என்றும் ஐடி வேலைக் கிடைப்பதே மிகவும் கடினம் ஆகிவிடும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

ஆடோமெஷன்

ஆடோமெஷன்

ஆடோமேஷன் நிறைய வேலைகளைக் குறைத்துக் கொண்டே வருகின்றது. வல்லுநர்கள் கூறும் கருத்தின் படி விரைவில் இந்திய ஐடி துறையில் மேலும் வேலை வாய்ப்புகள் குறையும் என்று கூறுகின்றனர்.

நிறுவனங்கள் 20 சதவீத ஊழியர்கள் வரை ஆடோமேஷன் நுழைவால் வெளியேற்ற விரும்புவதாகவும் கூறுகின்றனர். அடுத்து வருகின்ற மூன்று வருடத்தில் இது 35 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று லக்‌ஷ்மிகாந்த் கூறுகிறார்.

 

மறு திறனாய்வு மற்றும் பயிற்சிகள்

மறு திறனாய்வு மற்றும் பயிற்சிகள்

பல இந்திய ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குத் தங்களது ஊழியர்களுக்குப் புதுத் தொழில்நுட்பங்களில் பயறிச்சி அளிக்கத் துவங்கியுள்ளன.

தேய்வு நிலை

தேய்வு நிலை

ஊழியர்களிடையே தொய்வு நிலை அதிகரித்து வருகின்றது, அதனால் ஊழியர்களின் தேய்வு நிலை அதிகமாகக் குறையும் நிலையில் மாற்று ஊழியர் அல்லது புதிய ஊழியரைப் பணிக்கு எடுக்கும் முடிவுக்கு நிறுவனங்கள் தள்ளப்படும்.

2016-2017ம் ஆண்டுகளில் 40 சதவீதம் வரை ஊழியர்களின் தேய்வு நிலை குறையும் என்றும் ஆய்வு அவர் கூறினார்.

 

விசா

விசா

விசா போன்ற சிக்கல்களால் மென்பொருள் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு அதிகப்படியாகப் பணியாளர்கள் எடுத்து வருகின்றனர்.வெளிநாடுகளுக்குப் பணியார்களை வேலைக்கு எடுப்பதில் இந்தியாவிற்கு நிறையத் தாக்கம் உள்ளது.

எச்1-பி விசா குறித்து டிர்ம்ப் எழுப்பி வந்த பிரச்சனைகளும் ஓர் அளவிற்குத் தற்போதைக்குக் குறைந்துள்ளது, அதிலும் இந்தியர்களுக்குச் சாதகமாக நிறைய அம்சங்கள் இப்போது அதில் உள்ளது.

 

நாஸ்காம்

நாஸ்காம்

சென்ற மாதம் ஐடி சேவை மற்றும் பிபிஓ துறைகளைக் கண்காணிக்கும் மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்கள் தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் 25 வருடங்கள் வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்தில் இருந்து 2017-2018-ம் நிதி ஆண்டு வளர்ச்சி குறையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்பங்கள் வேகமாக மாற்றத்தைச் சந்தித்து வருகின்றன

தொழில்நுட்பங்கள் வேகமாக மாற்றத்தைச் சந்தித்து வருகின்றன

தொழில்நுட்பங்கள் வேகமாக மாற்றத்தைச் சந்தித்து வருகின்றன, அதற்கு ஏற்றவாறு ஐடி ஊழியர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். புதிதாகத் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் வேலை விட வேண்டியது தான் என்றும் லக்‌ஷிமிகாந்த் கூறினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+