22 ரூபாயிலிருந்து 900 கோடி, வசந்த் அன் கோ கடையை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: குடிசையிலிருந்து கோபுரத்திற்கு மாறிய திரு எச் வசந்தகுமாரின் கதை, ஒருவர் ஆடம்பரமான மேலாண்மை பட்டங்கள் இல்லாமலும் வெற்றிபெற்ற தொழிலதிபராக மாறமுடியும் என்பதை உணர்த்துகிறது.

வசந்தகுமார் விற்பனையாளராகத் தன் தொழிலைத் தொடங்கி, ஒவ்வொரு தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்றினார்.

மளிகைக் கடை
 

மளிகைக் கடை

38 வருடங்களுக்கு முன்பு தன் நண்பரால் வாடகைக்கு அளிக்கப்பட்ட மளிகைக்கடையை வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் மின்சாதனப்பொருட்கள் விற்கும் கடையாக மாற்றினார்.

வசந்த் & கோ

வசந்த் & கோ

இன்று அவர் வசந்த் & கோ என்ற மிகப்பெரும் வீட்டு உபயோகப்பொருள் விற்கும் சில்லறை வணிகச் சங்கிலித்தொடர் கடைகளை 64 கிளைகளுடன் தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரியில் நடத்துகிறார்.

வணிகக் கோட்பாடு

வணிகக் கோட்பாடு

அவரின் வணிகக் கோட்பாடு, குறைந்த வருவாய் பிரிவு நுகர்வோர் உள்ள ஊரகச் சந்தையில் களம் இறங்கி, அவர்கள் விரும்பும் பொருட்களை வாங்க வைப்பதேயாகும்.

தவனை முறை விற்பனை உக்தி

தவனை முறை விற்பனை உக்தி

அவர் பொருளின் விலையில் பாதிப் பணத்தை மட்டும் 6 மாதங்களில் கட்ட சொன்னார். மீதிப் பணத்தைப் பொருள் விற்கப்பட்டதும் தவணை முறையில் பெற்றுக்கொண்டார்..

இம்முறை மூலம் யாரும் பணம் கட்டாதவர் என்னும் நிலை ஏற்படாமல் என்பதை உறுதி செய்து கொண்டார்.

தமிழக அரசியல்
 

தமிழக அரசியல்

இன்று வசந்த குமார் தமிழக அரசியலிலும் கோலோச்சி காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாகவும் இருக்கிறார்.வசந்த் டிவி என்ற தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சியையும் நடத்துகிறார்.

படிப்பு, வேலையும்

படிப்பு, வேலையும்

நான் தமிழில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு இரண்டையும் அஞ்சல் வழியில் பயின்றேன். பின்பு விஜிபியில் விற்பனையாளராகச் சேர்ந்தேன். 8 வருடங்கள் அங்கு வேலை செய்தபிறகு வேலையை விட்டேன். என்னிடம் பணம் ஏதும் இல்லை. ஆனால் நிறைய நண்பர்களும் விஜிபியின் வாடிக்கையாளர்களும் இருந்தனர்.

ஒரு வாடிக்கையாளர் தன் கடையை மூடிவிட்டார். நான் ஆறு மாதத்தில் ரூ.8000 தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் எனக்குக் கடையைத் தர முன்வந்தார்.

விளம்பரப் பலகை

விளம்பரப் பலகை

பணத்தை மிச்சப்படுத்த நான் மரப்பெட்டியிலுள்ள மரக்கட்டையைக் கொண்டு என் கடைக்கு விளம்பரப்பலகை செய்தேன்.

விஜிபி-ன் திட்டத்தைப் பின்பற்றிய வசந்த்

விஜிபி-ன் திட்டத்தைப் பின்பற்றிய வசந்த்

விஜிபியில் ஒரு திட்டம் இருந்தது. அதாவது வாடிக்கையாளர் மாதா மாதம் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி வருவார். பொருளின் பாதி விலையை அடைந்ததும் பொருள் வாடிக்கையாளரிடம் விற்கப்படும்.

மீதி தொகையையும் மாதாமாதம் தவணை முறையில் செலுத்துவார். அதே திட்டத்தை என் கடையிலும் நான் ஆரம்பித்தேன். விஜிபியில் என்னுடன் நட்பாகப் பழகிய அனைத்து வாடிக்கையாளர்களையும் சென்று சந்தித்தேன்.

மூலதனம்

மூலதனம்

தேனாம்பேட்டையைச் சேர்ந்த திருப் பக்தவச்சலம் அவர்கள் மனமுவந்து அளித்த ரூ 22 என் மூலதனமானது.

விற்பனை

விற்பனை

எங்கள் நிறுவனத்தின் விற்பனை 900 (ரூ 900 பில்லியன் ) கோடியையும் தாண்டியது. 64 கிளைகளையும் சேர்த்து 1000 பேர் வேலை செய்கிறார்கள்.

எம்எல்ஏ - தொழில்

எம்எல்ஏ - தொழில்

என் தொழிலுக்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே நான் தொழிலதிபராக ஆகிவிட்டேன். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு தான் நான் எம் எல் ஏவாக ஆனேன் என்கிறார் வசந்தகுமார்.

இந்தியாவில் தொழில் செய்வது கசுலபமாக இருக்கிறதா?

இந்தியாவில் தொழில் செய்வது கசுலபமாக இருக்கிறதா?

இங்கு எதுவும் சுலபம் இல்லை. சின்னச் சின்ன விஷயங்களில் இருந்து ஒவ்வொன்றையும் படிப்படியாகத் திட்டமிட வேண்டும். ஏதேனும் தடைகளைச் சந்திக்க நேர்ந்தால், திசையை மாற்றி முன்னேறிச் செல்ல வேண்டும்.

நீங்கள் முன்னேறிச் செல்ல செல்ல நிறைய அனுபவம் கிடைக்கும். அனுபவங்கள் தடைக்கற்களைச் சுலபமாய்த் தாண்ட உதவிப் புரியும்.

வசந்த் & கோவின் தனித்த அடையாளம் என்ன?

வசந்த் & கோவின் தனித்த அடையாளம் என்ன?

வசந்த் & கோ என்பது வீட்டு உபயோகப் பொருட்களை மாத தவணையில் விற்கும் நிறுவனம். பெரிய நிறுவனங்களான அசோக் லேலண்ட் போன்றவற்றிற்குச் சாமான்கள் விநியோகிக்கிறோம். அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கும் பொருட்கள் விற்பனை .செய்திருக்கின்றோம்.

நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல்

நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல்

எங்களின் விற்பனைக்குப் பிந்திய சேவைகள் தரமாகவும் காலம் தவறாமலும் இருக்கும். நாங்கள் நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறோம். அந்நிறுவனங்கள் பணத்தை எங்களுக்குச் செலுத்தி விட்டு வாடிக்கையாளர்களிடம் மாத தவணை முறையில் பெற்றுக்கொள்ளும்.

சரக்கு மற்றும் சேவை வரி

சரக்கு மற்றும் சேவை வரி

சரக்கு மற்றும் சேவை வரி வர்த்தகத்தை நிச்சயமாக மேம்படுத்தும். எங்களுக்கு இப்போது தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் கேரளாவில் கடைகள் உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கப்பட்டவுடன் இந்தியா முழுவதும் கிளைகள் துவங்குவோம்.

பொருட்கள் தயாரிக்கும் முயற்சி தோல்வி

பொருட்கள் தயாரிக்கும் முயற்சி தோல்வி

நான் மிக்ஸி, மின்விசிறி மற்றும் மின் நிலைப்படுத்தி (ஸ்டெபிலைசர்) போன்ற பொருட்களின் தயாரிப்பை பத்து ஆண்டுகளாக முயற்சித்துப் பார்த்தேன். வாடிக்கையாளர்கள் வசந்த் & கோவை ஒரு சில்லறை விற்பனையகமாகவே கருதினர். எங்களை உற்பத்தியாளர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை.

அவர்களுக்கு நன்கு பரிச்சயமான பிரபல தயாரிப்புகளையே நாடினர். பத்து வருடங்களுக்குப் பிறகு உற்பத்தி முயற்சி தோல்வி என்பதை உணர்ந்து நிறுத்திவிட்டோம்.

இந்திய பொருட்கள் எப்படி வெளிநாட்டுப் பொருட்களுடன் போட்டி போடுகிறது?

இந்திய பொருட்கள் எப்படி வெளிநாட்டுப் பொருட்களுடன் போட்டி போடுகிறது?

வீடியோகானும், சாம்சங்கும் இந்தியாவிலேயே பொருட்களைத் தயாரிக்கின்றன. மற்றவை சீனாவில் தயாரிக்கின்றன. இந்திய பொருட்கள் எவ்விதத்திலும் சளைத்ததல்ல.

நீங்கள் ஏன் இறக்குமதி பொருட்களை விற்பதில்லை?

நீங்கள் ஏன் இறக்குமதி பொருட்களை விற்பதில்லை?

பொருட்களை இறக்குமதி செய்வது எளிதான காரியம் அல்ல. அதற்கு நிறைய நிறைய உழைப்பும், அனுமதிப் பத்திரம் மற்றும் தனிக் கணக்கும் வேண்டும். இத்தினை உழைப்புக்கான ஊதியம் குறைவு.

எப்படியும் உற்பத்தியாளர்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்போகிறார்கள். வாங்குவது மற்றும் விற்பது எளிதான செயல். அதனால் நான் அதையே கடைப்பிடிக்கிறேன்.

ஊரகப் பகுதிகளில் விற்பனை

ஊரகப் பகுதிகளில் விற்பனை

ஊரகப் பகுதிகள் மிகப்பெரிய சந்தை வாய்ப்பை எங்களுக்கு அளிக்கிறது. 60 சதவீத பொருட்களை நாங்கள் ஊரகப் பகுதிகளிலும் 40 சதவீதப் பொருட்களை நகரங்களிலும் விற்பனை செய்கிறோம்.

விற்பனைக்குப் பிந்தைய சேவை

விற்பனைக்குப் பிந்தைய சேவை

சிறந்த விற்பனைக்குப் பிந்தைய சேவை அளிப்பதே மிகப்பெரும் சவாலாகும். 100 இணைப்புகள் கொண்ட உதவி எண் சேவை உள்ளதால் யாவரும் எப்போது வேண்டுமானாலும் தொடர்புக்கு அழைக்கலாம்.

உற்பத்தியாளர்களுடன் ஒருங்கிணைந்து வாடிக்கையாளர்களின் குறைகள் உடனுக்குடன் விரைவாகத் தீர்க்கப்பட்டதை உறுதி செய்துகொள்கிறோம். இதற்காகவே தனியாகத் தகவல் அழைப்பு மையம் செயல்படுகிறது.

பிஜேபி மற்றும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் கீழ் தொழில் துறையை எப்படி ஒப்பிடுவீர்கள்?

பிஜேபி மற்றும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் கீழ் தொழில் துறையை எப்படி ஒப்பிடுவீர்கள்?

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொழில் புரிவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் பிஜேபி அரசாங்கம் தொடர்ந்து வரிகளை உயர்த்திக்கொண்டே போவது மட்டுமே ஒரே ஒரு நஷ்டம் விளைவிக்கும் பிரச்சனையாக உள்ளது.

அவர்கள் சேவை வரியை உயர்த்தினார்கள். அதனால் அதன் சுமையை நாங்கள் வாடிக்கையார்களிடம் வசூலிக்க வேண்டியிருக்கிறது. இதன்மூலம் பொருட்களின் விலை உயர்ந்து விற்பனை சரிகிறது.

மக்கள் நலனுக்காகவே வரிகள் விதிக்கப்படுகிறது என்பதை நானறிவேன். ஆனால் அரசாங்கம் அயல்நாட்டுப் பயணங்களுக்கு உபயோப்படுத்துவதை விடுத்து நல்ல திட்டங்களுக்கு உபயோகப்படுத்த வேண்டும்.

அவர்கள் உள்நாட்டிலேயே பயணம் மேற்கொண்டு ஒரு சாதாரண மனிதனின் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு அடிப்படை வசதிகளைச் செய்து தரவேண்டும்.

அணு உலைகளுக்கு எரிபொருள் தேடுவதை விடுத்து, குடிமக்களுக்குத் தண்ணீர் தர ஆவணச் செய்யவேண்டும்.

புதிய பட்டதாரிகளுக்கு உங்களின் அறிவுரை என்ன?

புதிய பட்டதாரிகளுக்கு உங்களின் அறிவுரை என்ன?

நேர்மையான மனிதன் கிடைத்தால் என்னால் நன்றாகப் பயிற்றுவிக்க முடியும். துரதிஷ்டமாக நம் பட்டதாரிகள் அடிப்படை திறமைகள் இல்லாததால் வேலையில்லாதவர்களாக இருக்கிறார்கள்.

பள்ளிக்கல்வி சிறந்ததாக அமைந்தால் மட்டுமே வேலைவாய்ப்பும் பெற முடியும். நீங்கள் மிதிவண்டி சரியாக ஓட்டக் கற்றுக்கொண்டால் மட்டுமே மோட்டார் வண்டி சரியாக ஓட்ட இயலும்.

நமது கல்வி முறை தரம் குறைந்த நிலையில் உள்ளது. அதன் அமைப்பை மேம்படுத்தும் எந்த முயற்சியையும் அவர்கள் எடுப்பதில்லை.

அனைத்து மாணாக்கர்களும் 8ஆம் வகுப்பு வரை வகுப்பு உயர்வு பெற வேண்டும் என்னும் நகைப்புக்குரிய விதிகளை நாம் வைத்துள்ளோம்.

பெரும்பாலான மாணாக்கர்கள் 9ஆம் வகுப்பு வரை கல்வி அற்றவர்களாகவும், அதற்குப் பிறகு சரியாகப் படிக்க முடியாதவர்களாகவும் ஆகின்றனர்.

அவர்கள் மேலும் அனைத்து மாணாக்கர்களையும் 10ஆம் வகுப்பு வரையும் உயர்வு கொடுத்து மேலும் 12ஆம் வகுப்பு வரையும் உயர்வு கொடுக்கச் சொல்வார்கள். இதன் பலன் பள்ளிகளிலிருந்து கல்லூரிகளிலிருந்தும் முட்டாள்களாக மட்டுமே வெளிவருவார்கள்.

இந்நிலை தொடர்ந்தால் நாம் அழிவைத் தரும் நிலைக்குத் தள்ளும் தாக்கங்களை ஏற்படுத்தும். நம் குழந்தைகளுக்கு ஆரம்பபள்ளி முதலே தரமான கல்வி கொடுக்கப்படவேண்டும். இதன் மூலம் அறிவுத்திறனுடன் திறமை வாய்ந்த பெரும்பான்மையான மாணவர்கள் கல்லூரிகளிலிருந்து வெளிவருவார்கள்.

வசந்த் & கோவின் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

வசந்த் & கோவின் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் எங்களின் அடிச்சுவட்டை விஸ்தரிப்போம். சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நடைமுறைப்படுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டது. ஆனால் பாஜக அன்று எதிர்த்தது.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

சரக்கு மற்றும் சேவை வரி 27% என்பது மிக அதிகமாக இருப்பதால் நாங்கள் எதிர்க்கிறோம். அரசாங்கம் 20% ஆகக் குறைக்க வேண்டும் எனக் கேட்கிறோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

From Rs 22 to Rs 900 crore, vasanth and co's success story

From Rs 22 to Rs 900 crore, vasanth and co's success story
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more