‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா’ திட்டத்தில் இணையம் மூலம் வீட்டுக் கடனிற்கு எப்படி விண்ணப்பிப்பது?
டெல்லி: அனைவருக்கும் வீடு திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டத்திற்கான விண்ணப்பங்கள் pmaymis.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் மூலமாகப் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜான திட்டத்திற்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிது, இதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் இணையதள விண்ணப்பத்தில் உள்ள வீரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்ய வேண்டியது மட்டுமே.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க உங்களுக்குத் தகுதி உள்ளது என்றால் பின் வரும் படிகளை நீங்கள் பின்பற்றி எளிதாக விண்ணப்பிக்கலாம்.
பயனாளிகள் பட்டியலில் பெயர் சரிபார்ப்பது எப்படி?
விண்ணப்பிக்கும் முன்பு பின் வரும் இணைப்பிற்குச் சென்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கின்றதா என்று சரி பார்க்கவும். இதற்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
ஆதார் எண் கட்டாயம்
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப் பயனாளிகள் தங்களது ஆதார் எண்ணைப் பின் வரும் இணைப்பில் உள்ளிட வேண்டும்.
ஆதார் எண் உள்ளிட்ட பிறகே உங்களுக்கு விண்ணப்பத்திற்கான இணைப்பிற்கு மாற்றப்படுவீர்கள்.
அதார் எண் உள்ளிட இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
மேலும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க உங்களுக்கு வங்கி கணக்கும் அவசியமான ஒன்றாகும்.
விண்ணப்பிக்கும் முறை
ஆதார் எண் உள்ளிட்ட பிறகு இந்தப் படத்தில் உள்ள இணைப்பிற்கு நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள்.
இங்கு உங்கள் முகவரி, வங்கி கணக்கு விவரங்கள், ஆதார் எண், தொடர்புகொள்ள வேண்டிய மொபைல் என், தனிப்பட்ட விவரங்கள், வருமான விவரங்கள் போன்றவற்றை உள்ளிட வேண்டும்.
சோதனை பெட்டி
முழு விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்த பிறகு ‘நான் அறிந்து இருக்கிறேன்...' என்ற சோதனை பெட்டியில் டிக் செய்துவிட்டு விண்ணப்பத்தைச் சேமிக்கவும் என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
விண்ணப்ப எண்
சேமிக்கவும் என்ற பொத்தானை கிளிக் செய்த பிறகு உங்களுக்கு விண்ணப்ப எண் ஒன்று கிடைக்கும். அதனைப் பிரிண்ட் அல்லது சேமித்து வைக்கவும். இது உங்களுக்குப் பிறகாலத்தில் இது உதவும்.
விண்ணப்பத்தின் நிலையை எப்படிக் கண்டறிவது
விண்ணப்பத்தின் நிலையைக் கண்டறிய இந்த இணைப்பை கிளிக் செய்து பெறலாம்.
விண்ணப்பத்தை எப்படி அச்சிடுவது
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இந்த இணைப்பை கிளிக் செய்து உங்களுக்குத் தேவையான போது அச்சிட்டுக்கொள்ளலாம்.
விண்ணப்பத்தைத் திருத்த முடியுமா?
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜான திட்டத்தின் கீழ் உங்கள் விண்ணப்பத்தைப் பின்வரும் இணைப்பிற்குச் செல்வதன் மூலமாகத் திருத்தம் செய்ய முடியும்.
இறுதி ஒப்புதல்
மதிப்பீடு நோக்கத்திற்காக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சகம் உங்கள் விண்ணப்பத்தைப் பெறும், பின்னர் இறுதி ஒப்புதல் மாநில அரசு / நகர்ப்புற உள்ளாட்சி உங்களுக்கு வழங்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications