ஆதார் எண் இல்லையா? இனி மொபைல் போனும் பயன்படுத்த முடியாது.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இந்தியாவில் உள்ள 1.1 பில்லியன் தொலைத்தொடர்பு சந்தாதார்களும் விரைவில் தங்களது ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடன் மற்றும் விலை போரினால் பாதிக்கப்பட்டு வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 1,000 கோடி வரை இதற்காக செலவு ஆகும் என்றும் கூறப்படுகின்றது.
இதற்காக அனைத்து சந்தாதார்களுக்கும் விளம்பரங்கள், போஸ்ட்டர்கள், குறுஞ்செய்தி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் தகவல் அளிக்க வேண்டும், என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பைத் தொலைத்தொடர்பு துறையும் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எப்போது முதல் பணிகள் தொடக்கம்
இன்னும் ஒரு மாதத்தில் இதற்கான பணிகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் துவங்க வேண்டும் என்றும் ஆதார் எண்ணை மீண்டும் அடையாள எண்ணாக இணைப்பதன் மூலம் முறைகேடான வழிகளில் சிம் கார்டுகள் பெற்ற விவரங்கள் சரி செய்யப்படும் என்றும் கூறப்படுகின்றது.
கால அவகாசம்
பிப்ரவரி மாதம் இந்த தீர்ப்பை அளித்த உச்ச நீதிமன்றம் சரியாக ஒரு வருடம் அதாவது 2018 பிப்ரவரி 6-ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு
சில வருடங்களுக்கு முன்பு தீவிரவாதம், குற்ற நடவடிக்கைகள் போன்றவற்றை குறைக்க மத்திய அரசு இதே போன்று வாடிக்கையாளர் விவரங்களைச் சரி பார்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதன் பேரில் டெலிபோன் நிறுவனங்கள் அழைப்புகள் மூலம் வாடிக்கையாளர்கள் விவரங்களைப் பெற்று சரி பார்த்தன.
முறைகேடாக சிம் கார்டுகள் வாங்குவதும் குறையும்
இப்போது இந்தத் தீர்ப்பால் இனி ஆதார் இல்லாமல் சிம் கார்டுகள் வாங்கவே முடியாது என்ற நிலை உருவாகும். முறைகேடாக சிம் கார்டுகள் வாங்குவதும் குறையும்.
1,000 கோடி ரூபாய் செலவு எதற்காக?
ஆதார் கார்டு எண்கள் பெறும் முறையினால் அதிக செலவாகும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறி வருகின்றன. இதற்காக ஏர்டெல், வோடாபோன், ஐடியா, ஜியோ போன்ற நிறுவனங்கள் மேலும் முதலீடுகளைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பயோமெட்ரிக் சாதனங்கள், ஊழியர்கள் பயிற்சிகள் அளிக்க என 1,000 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று கூறப்பட்டாலும் நீண்ட கால பயனை அரசுக்கும் நிறுவனங்களுக்கும் இது அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் அலுவலகத்தில் விவாதம்
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து தொலைத்தொடர்பு துறை பிப்ரவரி 13-ம் தேதி பிரதமர் அலுவலகத்தில் விவாதிக்கப் பட்ட பிறகு இப்போது இது குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சரிபார்ப்பு குறியீடு
ஆதார் மறு சரிபார்ப்பு முறைக்காக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சந்தாதார்களுக்கு சரிபார்ப்பு குறியீட்டை அனுப்பும் என்றும் இதனைச் சரிபார்க்க வாடிக்கையாளரும் சிம் உடன் வர வேண்டிய நிலையும் ஏற்படும்.
வாடிக்கையாளர்கள்
ஏற்கனவே சிம் வாங்க ஆதார் கார்டுகளை சமர்ப்பித்த வாடிக்கையாளர்களுக்கு இதில் எந்தச் சிக்கலும் இல்லை. 2016 ஆகஸ்ட் மாதம் முன்பு வரை சிம் பெற்ற வாடிக்கையாளர்கள் தான் இதில் பெறும் பாதிப்பு அடைவார்கள்.
ஜியோ
புதிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தங்களது அனைத்து வாடிக்கையாளர்களையும் ஆதார் கார்டு சரிபார்ப்பு முறை மூலமாகவே சேர்த்துள்ளது.
எனவே மொபைல் போன் சந்தாதார்கள் அனைவருக்கும் இப்போது ஆதார் கட்டாயம் என்பது உறுதி.உங்களிசன் ஆதார் எண் இல்லையா? இனி மோபைல் போனும் பயன்படுத்த முடியாது.. உச்ச நீதி மன்ற வைத்த ஆப்பு..!
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications