ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் F&O பிரிவில் வர்த்தகம் செய்ய 1 வருடம் தடை.. செபி அதிரடி..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் F&O பிரிவில் வர்த்தகம் செய்ய 1 வருடம் தடை.. செபி அதிரடி..!

பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி, இந்தியாவில் 2வது பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் F&O பிரிவில் வர்த்தகம் செய்ய 1 வருடம் தடை விதித்துள்ளதுள்ளது.

2007ஆம் ஆண்டு நேரடியாக அல்லது மறைமுகமாக ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தில் முறைகேடான வர்த்தகத்தைச் செய்த காரணத்திற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்பட 12 அமைப்புகளுக்கு வர்த்தகம் தடை விதித்துள்ளது செபி.

447.27 கோடி ரூபாய்

447.27 கோடி ரூபாய்

F&O பிரிவில் வர்த்தகம் செய்ய 1 வருடத் தடை மட்டுமல்லாமல் மூலதன சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு ரிலையன்ஸ் நிறுவனத்தை அடுத்த 45 நாட்களுக்குள் 447.27 கோடி ரூபாய் தொகையை 12 சதவீத வட்டியுடன் நவம்பர் 29, 2007 ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு முதலீட்டாளர்களுக்கு அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேல் முறையீடு

மேல் முறையீடு

இந்த உத்தரவை அடுத்து இதுகுறித்து ரிலையன்ஸ் கூறுகையில், "செபியின் உத்தரவுகளை ஏற்புடையது அல்ல, பரிவர்த்தனை அனைத்தும் நியமானதே எனவே இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம்" என இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

மார்ச் 2007ஆம் ஆண்டு ரிலையன்ஸ், தனது ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளைப் பொதுச் சந்தையில் விற்பனை செய்து நிதியைத் திரட்ட முடிவு செய்தது.

இதற்காக 12 அமைப்புகளை நிறுவியது குறிப்பிடத்தக்கது. இதன் வாயிலாகவே ரிலையன்ஸ் நிறுவனம் முறைகேடான வர்த்தகத்தைச் செய்துள்ளது எனச் செபி குற்றம் சாட்டியுள்ளது. 2007ஆம் ஆண்டு நடந்த வர்த்தகத்தின் தீர்ப்பு 2017ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது.

 

513 கோடி லாபம்

513 கோடி லாபம்

ரிலையன்ஸ் மற்றும் 12 அமைப்பு இணைந்து செய்த முறைகேடான வர்த்தகத்தின் வாயிலாக ரிலையனஸ் இண்டஸ்ட்ரீஸ் 513 ரூபாய் அளவிலான நன்மையை அடைந்துள்ளது. இது பங்குச்சந்தையை வர்த்தக விதிமுறைகளுக்கு முற்றிலும் முறைகேடானது என்று செபியின் முழுநேர உறுப்பினரான ஜி.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

செட்டில்மென்ட் பிரைஸ்

செட்டில்மென்ட் பிரைஸ்

நவம்பர் 2007 செய்யப்பட்ட பங்கு விற்பனையில் 12 அமைப்புகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனத்துடனான தனிப்பட்ட ஒப்பந்தத்தின் வாயிலாகச் சுமார் 93.63 சதவீத இருப்பு அனுமதியை வழங்கியுள்ளது. இது முறைகேடான ஒன்று.

மேலும் F&O பிரிவில் நவம்பர் 2007 மாதம் வெளியிடப்பட்ட ஆணைகள் நவம்பர் 29, 2007ஆம் முடிந்த போது இதன் செட்டில்மென்ட் விலையை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுவே செபி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களாகும்.

 

9.92 கோடி பங்குகள்

9.92 கோடி பங்குகள்

5 சதவீத பங்கு விற்பனைக்கு முன் F&O பிரிவில் ரிலையன்ஸ் 9.92 கோடி பங்குகளை 12 அமைப்புகளுடன் இணைந்து விற்பனை செய்ய அனுமதி பெற்று இருந்தது.

நவம்பர் மாத ஆர்டர்

நவம்பர் மாத ஆர்டர்

நவம்பர் 29ஆம் தேதி F&O பிரிவில் 7.97 கோடி பங்குகள் அடங்கிய ஆர்டர்களின் விலை சரிந்த அதே நேரத்தில் 1.95 கோடி பங்குகள் பணச் சந்தையில் ரிலையன்ஸ் வர்த்தகம் செய்துள்ளது.

இதன் மூலம் ஒரு பிரிவில் ஏற்பட்ட சரிவை மற்றொரு பிரிவில் செய்யப்பட்ட வர்த்தகத்தின் வாயிலாக ஈடு செய்துள்ளது ரிலையன்ஸ். இத்தகைய முறைகேடான வர்த்தகத்தின் மூலம் ரிலையன்ஸ் மற்றும் 12 அமைப்புகளும் 513 கோடி ரூபாய் அளவிலான நன்மையை அடைந்துள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+