விரைவில் ஓட்டுநர் உரிமம் பெறவும் ஆதார் கட்டாயம்..!
ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களைக் கண்டறிவதற்காக மத்திய அரசு புதிய ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களுக்கு ஆதார் அடையாளம் கண்டறிதல் முறை அவசியம் என்றும் இது உரிமத்தை புதுப்பிக்கவும் அவசியம் என்று முடிவு செய்துள்ளது.
இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுநர் உரிமம் பெறுவது தடுக்கப்படும் என்றும், மேலும் போக்குவரத்து டிராப்பிக் விதிகளை மதிக்காமல் போனால் அப்போது உரிமத்தை ரத்து செய்யவும் இது பயன்படும் என்றும் மத்திய அரசு கூறுகின்றது.
எப்போது முதல் ஆதார் கட்டாயம்
ஆதார் பயோமெட்ரிக் விவரங்களைப் பயன்படுத்திப் போலி ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களையும் எளிதாகப் பிடிக்க முடியும் என்றும், இந்த ஆதார் முறை வருகின்ற அக்டோபர் மாதம் முதல் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் கட்டாயம் ஆக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம்
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இதற்கான பணிகளை ஏற்கனவே துவங்கியுள்ளதாகவும், விரைவில் மாநிலங்கள் வாரியாக ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்றும், பாதுகாப்பான அமைப்பாக இந்த மாற்றங்கள் இருக்கும் என்றும் இனி ஆர்டிஓ அலுவலகங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உரிமங்கள் பெறுவது தடுக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.
காவல் துறை விசாரணையில் உள்ள சிக்கல்
ஆர்டிஓ அலுவலகங்களில் இப்போது வரை இரண்டு மூன்று ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களைக் கண்டறிய முடியவில்லை என்றும் இதனால் காவல் துறையினரின் விசாரணையிலும் இது பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றது.
ஒரு ஆவணம் போதும்
ஆதார் கார்டு இருக்கின்றது என்றால் ஓட்டுநர் உறினம் பெறும் போது இது ஒன்றை மட்டும் ஆவணமாகச் சமர்ப்பித்த போதும். ஆதார் கார்டு இல்லாதவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பணிகள் துவக்கம்
ஆர்டிஓ அலுவலகங்கள் இப்படித் தரவுகளைப் பதிவு செய்வதற்கான அனைத்துப் பணிகளும் முடிக்கிவிடப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆர்டிஓ அலுவலகங்கள் ஓட்டுநர் உரிமத்தின் வரங்களைச் சரிபார்ப்பதற்கான மத்திய தரவு தளத்தில் இருந்து எளிதாக விவரங்களைப் பெற முடியும். மேலும் முறைகேடாக ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்துகின்றாரா, வேறு மாநிலங்களில் ஆதார் அட்டைப் பெற்றுள்ளார்களா என்பதையும் எளிதாகக் கண்டறிய முடியும்.
கைமுறையாக விவரங்கள்
இதுவரை ஆர்டிஓ அலுவலகங்கள் கைமுறையாகத் தான் விவரங்களைச் சேமித்து வருகின்றன. இதனால் அவர்களால் ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களின் விவரங்களைப் பெற முடிவதில்லை.
தேசிய தகவலியல் மையம் வாகனங்களின் விவரங்கள், ஓட்டுநர் உரிமம் உள்ள ஓட்டுநர்கள் விவரங்கள் போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகங்களிடம் இருந்து பெற்றும் தரவுகளை நிர்வகிக்கும்.
போலிகளைக் கண்டறிவது கடினம்
பேப்பர்களாக இருக்கும் அனைத்து விவரங்களையும் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றும் பணிகள் நடந்து வருவதாகவும், இது ஒரு மிகப் பெரிய சவால் என்றும், போலி மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களை எளிதாகக் கண்டறிவது மிகவும் கடினம் என்றும் கூறுகின்றனர்.
வழங்கப்பட்ட மொத்த ஓட்டுநர் உரிமங்கள்
அதிகாரப்பூர்வமான தகவலின்படி இது வரை மொத்தமாக 18 கோடிக்கும் மேற்பட்டோர் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications