1,712 நிறுவனங்கள் மீது நடவடிக்கை.. மத்திய அரசு அதிரடி உத்தரவு..!
பங்குச்ந்தை கட்டுப்பாடு ஆணையமான செபி நிறுவன சட்டம் 2013ஐ பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் அமலாக்கம் செய்த காரணத்தினால், பங்குச்சந்தையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் தங்களது நிர்வாகக் குழுவில் குறைந்தபட்சம் 1 பெண் உறுப்பினரை ஏப்ரல் 1, 2015க்குள் சேர்கக்க வேண்டும்.
இதைச் செய்யத் தவறிய 65 பொதுத்துறை நிறுவனங்கள், 1,355 தனியார் நிறுவனங்கள் மீது நிறுவன பதிவாளர்கள் அமைப்பை நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் பாலின பாகுபாட்டை அதிகளவில் குறைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது மத்திய அரசு.
இந்நிலையில் நிறுவன பதிவாளர்கள் அமைப்பு, 1,355 தனியார் நிறுவனங்கள், பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத 292 நிறுவனம், 65 பொதுத்துறை நிறுவனங்கள் என மொத்த 1,712 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக மாநில கார்பரேட் விவகார துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications