மேகாலயா அரசின் மெத்தனம்.. வேலை செய்யாது ஊழியர்களுக்கு 5 கோடி சம்பளம்..! சிஏஜி பளார்
மேகாலயா அரசு லாட்டரி ஊழியர்களுக்கு எந்த வேலையும் அளிக்காமல் சம்பளம் மட்டும் அளித்து வந்துள்ளது சிஏஜி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
மேகாலயா அரசு நடத்தி வந்த லாட்டிரி 2011-ம் ஆண்டு அனைத்து லாட்டிரி சேவையும் நிறுத்திய நிலையில் 2008-ம் ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ஏறக்குறைய லாட்டிரி வணிகத்தை மூடியது.
ஆனால் அரசு 27 மாநில லாட்டரிகள் இயக்குனரக ஊழியர்களுக்கு வருகை பதிவில் கையெழுத்துப் போட்டால் போதும் என்று சம்பளம் அளித்து வந்துள்ளது.
சிஏஜி அறிக்கை
2016-ம் ஆண்டு வரை அதாவது எட்டு வருடமாக மேகாலயா அரசு 27 ஊழியர்களுக்கு 5.69 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஆனால் இவர்களைப் பிற பணிகளான கலால், பதிவு, வரிவிதிப்பு மற்றும் முத்திரைகள் துறை என்று எங்கும் மாற்று வேலையும் அளிக்கவில்லை என்று அன்மையில் வெளிவந்த தணிக்கையாளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
காலியாக உள்ள பணியிடங்கள்
மாநில லாட்டரிகள் இயக்குனரகத்தின் கீழ் மொத்தம் 122 பணியிடங்கள் காலியாக உள்ளன. மனிதவள நிர்வாகத் துறை திறம்படச் செயல்படாததால் ஊழியர்கள் பலனற்ற செலவின் விளைவாக 5.69 கோடி ரூபாய் சும்மா ஊதியம் என்ற பெயரில் அளித்து வீணடித்துள்ளது என்று சிஏஜி அறிக்கை கூறுகின்றது.
34.42 கோடி முறைகேடு
மேலும் லாட்டரி சட்டம் 1988-ன் கீழும், மேகாலயா லாட்டிரி விதிகள் 2002-ன் கீழும் 34.42 கோடி ரூபாய் முறைகேடு செய்திருப்பதும் தணிக்கையாளர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
திரைப்படம் தயாரிப்பு
மேகாலயா அரசின் கஜானா காலியாக இருந்த போதிலும் திரைப்பட விழாக்கள் நடத்துவது, 12.44 கோடி செலவில் பாலிவுட் திரைப்படத் தயாரிப்பது போன்றவற்றுக்குச் செலவு செய்துள்ளது.
விழக்கள்
2018-ம் ஆண்டு 18 டிகிரீஸ் திரைப்பட விழா, 2015-ம் ஆண்டு டெர்ரா மத்ரே, 2016-ம் ஆண்டுச் செர்ரி பிளாசம் போன்ற விழாக்களையும் மேகலாய அரசு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications