18-20 மணிநேரம் வேலை செய்யனும்.. இல்லைனா கிளம்பிக்கிடே இரு. அரசு ஊழியர்களுக்கு உபி முதல்வர் வைத்த செக்..!
உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் பிஜேபி வெற்றிபெற்ற நிலையில் இம்மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதிவியேற்றார்.
முதல்வராக ஒரு பொதுக்கூட்டத்தைக் கூட இன்னும் நடக்காத நிலையில் 50க்கும் மேற்பட்ட முடிவுகளை எடுத்துள்ளார். மக்கள் மத்தியில் இந்த முடிவுகளுக்கு மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், ஆதித்யநாத் நேற்று (ஞாயிறு கிழமை) தனது வீட்டில் பிஜேபி தலைவர்கள் முன்னிலையில் நடத்தக் கூட்டத்தில் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனால் இம்மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
18-20 மணிநேரம் வேலை
இக்கூட்டத்தில் பேசி முதல்வர் ஆதித்யநாத், மாநில அரசு அதிகாரிகள் தினமும் 18-20 மணிநேரம் வரை வேலை செய்யத் தாயாராக வேண்டும், இதற்குத் தயாராகாதவர்கள் வேலையை விட்டு வெளியேற எவ்விதமான தடையுமின்றி வெளியேறிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.
அரசு திட்டங்கள்
மாநில அரசு, அரசின் திட்டத்தைச் செயல்படுத்துவதிலும், அமல்படுத்துவதிலும் எவ்விதமான தொய்வும் இருக்கக் கூடாது. இதனால் 18-20 மணிநேரம் வேலை செய்யும் அதிகாரிகள் மட்டும் தங்களது பணியைத் தொடரலாம். மற்றவர்கள் எவ்விதமான தாமதம், தடையுமின்றி வெளியேறலாம் என்று திட்டவட்டமாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பதிவியேற்றிய பின் முதல் முறைாகத் தலைவர்களைச் சந்திக்கும் கூட்டம் இது.
வொர்கஹாலிக்
நான் கடுமையாக உழைப்பவன், அரசு அதிகாரிகள் அரசின் தேவையை முழுமையாகப் பூர்த்திச் செய்ய வேண்டும். இதற்காக அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இந்நிலையில் வேலை செய்யாதவர்கள், அரசின் தேவையைப் பூர்த்திச் செய்யாவார்களுக்கு அரசி பணியில் இடம் இல்லை என்று கடுமையாகத் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
முக்கியத் தலைவர்கள்
இக்கூட்டத்தில் பிஜேபி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், உயர் அதிகாரிகள் எனப் பல தரப்பினர் இருந்தனர். மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகள், அறிவித்த திட்டங்களை முதன்மை பணியாகக் கொண்டு புதிய அரசு இயங்க உள்ளதாகவும் உபி முதல்வர் கூறினார்.
என்ன கொடுமை இது...
உத்தரப் பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வர் ஆதித்யநாத் அவர்களின் கருத்துக்களும் முடிவுகள், அறிவிப்புகள் என அனைத்து அதிர்ச்சி அளிக்கும் வகையிலும், கடுமையாகவே மக்கள் மத்தியில் விளங்குகிறது.
ஆனால் 18-20 மணிநேர அரசு அதிகாரிகளின் பணி சற்று மாறுபட்டு உள்ளது. கார்பரேட் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் இலக்கை அடைவதற்காக ஊழியர்கள் பலர் 12 மணிநேரத்திற்கும் அதிகமாகப் பணியாற்றுகிறார்கள்.
மாநில அரசு
மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் மற்றும் பல சலுகைகளை அனுபவிக்கும் அரசு அதிகாரிகள், மக்களின் நலனுக்காக உருவாக்கப்படும் திட்டங்களின் இலக்கை அடைய 18-20 மணிநேரம் பணியாற்றுவது தவறு இல்லை என உபி மக்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாடு
தமிழ்நாட்டிலும் அரசு அதிகாரிகள் 18-20 மணிநேரம் பணியாற்ற வேண்டும் என்று அறிவித்தால் எப்படி இருக்கும்.?
உங்கள் கருத்தை பதிவு செய்யவும்..!
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications