இந்தியாவில் பற்றாக்குறை இருக்கும் போது நேபாலுக்கு எண்ணெய்யை சப்ளை செய்யுதாம் இந்தியன் ஆயில்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப் நிறுவனம் திங்கட்கிழமை நேபாளத்திற்கு ஆண்டுக்கு 1 மில்லியன் டன்கள் வரை பெட்ரோலியம் பொருட்களை அளிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று நிறுவனத்தின் தலைவர் பி அசோக் தெரிவித்துள்ளார்.

 

இதற்காகத் திங்கட்கிழமை போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2022 வரை எண்ணெய் பொருட்கள், பெட்ரோல், டீசல், கெரோசின், விமானங்களுக்கான எரிபொருட்கள் மற்றும் எல்பிஜி உள்ளிட்டவற்றைத் தேவையான அளவு அளிக்க இருப்பதாகப் பத்திரிக்கையாளர்களிடம் அசோக் தெரிவித்துள்ளார்.

இதனால் வரும் ஏப்ரல் முதல் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் ஈரோ IV ரகப் பெட்ரோல் மற்றும் டீசல் எண்ணெய்களை அளிக்க இருக்கின்றது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

ஓவ்வொறு 5 வருடமும் நேப்பாளுக்குப் பெட்ரோல் அளிப்பதற்கான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என்றும், இதற்காகத் திங்கட்கிழமை அடுத்த ஐந்து வருடங்களுக்குக் கச்சா எண்ணெய் பொருட்களை நேப்பாலுக்கு அனுப்புவதற்காக நேப்பால் கார்ப்ரேஷனுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் பெட்ரோலியத் துறை அமைச்ச தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் முன்பு இருந்த ஒப்பந்தத்தைப் பொன்று இல்லை என்றும் இது இரு நாட்டுக்களுக்கு இடையிலுமான நலனுக்கான ஒப்பந்தம் என்றும் அவர் கூறினார்.

எரிபொருள் கொண்டு செல்ல பைப்லைன்

எரிபொருள் கொண்டு செல்ல பைப்லைன்

நேபாளத்தின் பெட்ரோல் தேவையைப் பூர்த்திச் செய்வது இந்தியாவின் கடமை என்றும், 2014-ம் ஆண்டுப் பிரதமர் மோடி அவர்கள் நேப்பால் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், ராக்சவுல்-அமலெகெஞ் பெட்ரோலிய தயாரிப்பு குழாய் பதிப்பதற்கான பொறுப்பை நேப்பால் பாராளுமன்றம் எடுத்துக்கொண்டுள்ளது.

எங்கு இருந்து எண்ணெய் பொருட்கள் அனுப்பப்படும்
 

எங்கு இருந்து எண்ணெய் பொருட்கள் அனுப்பப்படும்

இப்போது எரிபொருள் பைப்லைன் மூலம் எடுத்துச் செல்லப்படாமல் டிரக்குகள் மூலம் எடுத்துச் செல்லப்படுவதாகவும், விரைவில் பைப்லைன் மூலம் கொண்டு செல்லப்படுமென்றும், இதற்காகப் பாட்னா-மோதிஹரி-அம்லெக்கன்ஜ் வழியாகப் பைப்லைன் அமைக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் அலுவலக வட்டாரங்களின் தகவல் படி பிஹாரில் உள்ள ஐஓசி இரப்பையிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மையத்திலிருந்தும், மேற்கு வங்கத்தின் ஹால்டியா எண்ணெய் சுத்திகரிப்பு மையத்திலிருந்தும் நேப்பாலுக்கு அளிக்கப்படும் என்று கூறுகின்றனர்.

எப்போது முதல் பைப்லைன் அமைக்கப்படும்

எப்போது முதல் பைப்லைன் அமைக்கப்படும்

பைப்லைன் அமைப்பதற்கான பணிகள் 2017-2018-ம் நிதி ஆண்டு முதல் துவங்கப்படும் என்றும் மத்திய பெட்ரோல் துறை அமைச்சர் பிதான் தெரிவித்தார்.

நீட்டிப்பிற்குத் தொழில்நுட்ப உதவி

நீட்டிப்பிற்குத் தொழில்நுட்ப உதவி

நேப்பால் அரசுக்கு காத்மண்டு வரை இந்தப் பைப்லைன் அமைக்க வேண்டும், என்றும் இந்த 70 கிமி தொலைவிலான நீட்டிப்பிற்கு இந்திய எண்ணெய் கார்ப்ரேஷன் நிறுவனத்திடம் இருந்து தொழில்நுட்ப உதவியை மட்டும் எதிர்பார்க்கின்றது.

உயர் மட்ட அதிகாரிகள் குழு

உயர் மட்ட அதிகாரிகள் குழு

பெட்ரோலியத் துறை அமைச்சர் பிரதான் பைப்லைன் அமைப்பதற்காக உயர் மட்ட அதிகாரிகள் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எண்ணெய் கொண்டு செல்வதற்கான பைப்லைன் மட்டும் இல்லாமல் எல்பிஜி பைப்லைன் அமைக்கும் பணிகளையும் செய்வார்கள் என்று கூறினார்.

2 லட்சம் கிலோ லிட்டர்

2 லட்சம் கிலோ லிட்டர்

இந்தியா ஏற்கனவே நேப்பாலத்திற்கு 2,00,000 கிலோலிட்டர் எண்ணெய்யைச் சாலை வழியாகவே இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் அளித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தட்டுப்பாடு

இந்தியாவில் தட்டுப்பாடு

நேப்பாலிற்குப் பெட்ரோல் அளிப்பது சீனாவிற்குப் போட்டியான இந்தியாவின் நடவடிக்கை என்றாலும் ஏற்கனவே இந்தியாவில் உள்ள தட்டுப்பாட்டிற்கு அரசு என்ன பதில் சொல்லப் போகின்றது என்றும் தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Oil Corporation to supply 1 million tonnes of fuel to Nepal for next 5 years

Indian Oil Corporation to supply 1 million tonnes of fuel to Nepal for next 5 years
Story first published: Tuesday, March 28, 2017, 19:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X