எலியும் பூனையும் ஒன்று சேர வேண்டுமென நெருக்கடி.. விஸ்பரூபம் எடுக்கும் இந்கிய ஈகாமர்ஸ் நிறுவனங்கள்..!

விற்பனைக்கு வருகிறது 'ஸ்னாப்டீல்'.. யாருக்கு வேண்டும்..? அதிரடி அறிவிப்பு..!

இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் மிகப்பெரிய இடத்தில் இருந்த பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் ஆகியவை அமேசான், பேடிஎம், அலிபாபா மற்றும் இதர சிறு மற்றும் குறு ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மூலம் தொடர்ந்து வர்த்தகச் சரிவை சந்தித்து, மிகப்பெரிய நஷ்டங்களைப் பெற்று வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் இந்திய ஈகாமர்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த பன்னாட்டு நிறுவனங்கள் லாபத்திற்காக நிறுவனங்களைக் கேள்வி கேட்ட நிலையில், ஈகாமர்ஸ் மட்டும் அல்லாமல் பல ஆன்லைன் வர்த்தகத்தை நிறுவனங்களின் நிலை தலைகீழாக மாறியுள்ளது.

இதில் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் நிலை மிகவும் மோசம்..

பிளிப்கார்ட் - ஸ்னாப்டீல்

பிளிப்கார்ட் - ஸ்னாப்டீல்

ஒரு காலத்தில் வர்த்தகத்திற்காகச் சரிசமமாகப் போட்டி போட்டு வந்த நிலையில், இன்று பிளிப்கார்ட் - ஸ்னாப்டீல் நிறுவனங்களை நிலைகுலைந்து போயுள்ளது.

இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் ஈபே நிறுவனத்தின் இந்திய கிளை மற்றும் அதன் வர்த்தகத்தை முழுமையாக வாங்க ஒப்புக்கொண்டுள்ள நிலையில், சந்தையில் பிளிப்கார்ட் நிறுவன வளர்ச்சியின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது.

 

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல்

என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கும் ஸ்னாப்டீல் நிறுவனம், அதன் முதலீட்டாளர்கள் நிறுவனத்தை மொத்தமாகப் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்து விடலாம் என்று நெருக்கடி அளித்து வருகின்றனர்.

வெற்றி

வெற்றி

ஈகாமர்ஸ் மட்டும் அல்லாமல் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் அதீத நிதிநெருக்கடி நிலவும் இச்சூழ்நிலையில், பிளிப்கார்ட் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் மத்தியிலான இணைப்பு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பாகப் பார்க்கப்படும்.

அதிக லாபம்

அதிக லாபம்

இந்த இணைப்பில் அதிக லாபம் அடைவது ஜப்பான் நாட்டின் முன்னணி டெலிகாம் மற்றும் இண்டர்நெட் நிறுவனமான சாப்ட்பாங்க் தான்.

ஸ்னாப்டீல் நிறுவனத்தில் 30 சதவீதம் பங்குகளில் சுமார் 6.5 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ள நிலையில் இக்கூட்டணிக்குப் பின் 15 சதவீத பங்குகளைப் பெறுவார்.

அதுமட்டும் அல்லாமல் கூட்டணி உறுதியானால் கூடுதலாக 1.5 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யவும் தயாராக உள்ளது சாப்ட்பேங்க்.

 

டைகர் குளோபல்

டைகர் குளோபல்

பிளிப்கார்ட் நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ள டைகர் குளோபல், கடந்த சில மாதங்களாக இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய யோசித்து வரும் நிலையில், பிளிப்கார்ட் - ஸ்னாப்டீல் கூட்டணி உறுதியானால் 1 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

பங்கு விற்பனை

பங்கு விற்பனை

மேலும் இணைப்பிற்காக ஏதுவாகப் பிளிப்கார்ட் நிறுவனத்தில் டைகர் குளோபல்-க்கு இருக்கும் 30 சதவீத பங்குகளில் 10 சதவீத பங்குகளையும், ஸ்னாப்டீல் நிறுவனத்தில் சாப்ட்பேங்க் இருக்கும் 30 சதவீத பங்குகளில் 15 சதவீத பங்குகளை விற்பனை செய்ய இரு தரப்பு தயாராக உள்ளது.

என்ன கொடுமை இது...

என்ன கொடுமை இது...

ஸ்னாப்டீல் நிறுவனத்தில் 30 சதவீத பங்குகளில் முதலீடு செய்துள்ள சாப்ட்பேங்க், இந்நிறுவனத்தைப் பிளிப்கார்ட் உடனே அல்லது அலிபாபா-பேடிஎம் நிறுவனத்துடனோ விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

இல்லையெனில் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் இருக்கும் தனது முதலீட்டை முழுமையாக வெற்ற முடிவில் உறுதியாகச் சாப்ட்பேங்க் உள்ளது

 

விற்பனை உறுதி

விற்பனை உறுதி

இந்நிலையில் ஸ்னாப்டீல் விற்பனை செய்யப்படுவது உறுதியான நிலையில் இதனை யார் வாங்கப் போகிறார்கள் என்பதே தற்போதைய கேள்வி.

மேலும் ஸ்னாப்டீல் நிறுவனத்துடன் இணையப்போகும் நிறுவனம் இந்தியாவில் அமேசான் நிறுவனத்துடன் போட்டுப்போட முழுமையாகத் தயாராகும் என்பது உறுதி.

 

பிளிப்கார்ட் - ஈபே

பிளிப்கார்ட் - ஈபே

இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் பிளிப்கார்ட் நிறுவனம் வர்த்தக அளவுகளில் முதல் இடத்தில் இருந்தாலும் அதிகளவில் நஷ்டத்தில் உள்ளது. இதன் காரணமாகத் தனது வர்த்தகத்தை அதிகரிக்க ஈபே உடன் இணையத் திட்டமிட்டுள்ளது.

ஈபே

ஈபே

உலகிளவில் இணைய வர்த்தகத்தில் ஈட்டுப்பட்டுள்ள ஈபே.காம் தனது இந்தியா வர்த்தகப் பிரிவான ஈபே.இன் நிறுவனத்தைப் பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைக்க இரு நிறுவனங்களுக்கும் முடிவு செய்துள்ளது.

500 மில்லியன் டாலர்

500 மில்லியன் டாலர்

இதுமட்டும் அல்லாமல் இந்த இணைப்பிற்குப் பின் ஈபே நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்தில் 500 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

கூடுதல் முதலீடு

கூடுதல் முதலீடு

இந்நிலையில் ஈபே நிறுவனத்தின் ஆஸ்தான முதலீட்டாளர்களான மைக்ரோசாப்ட் மற்றும் டென்சென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 1.5-2 பில்லியன் டாலர் வரையில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்த முதலீட்டுடன் பிளிப்கார்ட், அமேசான், அலிபாபா நிறுவனங்களின் ஆதிக்கத்தைத் தகர்த்தெரிய உள்ளது.

 

பேடிஎம்

பேடிஎம்

இந்திய சந்தையின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனமான விளங்கும் பேடிஎம் கடந்த 5 மாதத்தில் அடைந்த வளர்ச்சியைக் கண்டு வியக்காத நிறுவனங்களே இல்லை. இதில் பேடிஎம் நிறுவன முதலீட்டாளர்கள் என்ன விதிவிலக்கா..?

அலிபாபா

அலிபாபா

பேடிஎம் நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்நிறுவனத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லவும், அதனை முழுமையாகக் கைப்பற்றவும் இதன் முக்கிய முதலீட்டாளர்களான அலிபாபா மற்றும் SAIF பார்ட்னர்ஸ் ஆகியவை புதிதாத இந்நிறுவனத்தில் 200 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

40இல் இருந்து 60 வரை உயர்வு

40இல் இருந்து 60 வரை உயர்வு

ஏற்கனவே சீன நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா மற்றும் அதன் பேமெண்ட்ஸ் மற்றும் வேலெட் சேவை நிறுவனமான ஆன்ட் பைனான்சியல் நிறுவனங்கள் இணைந்து சுமார் 40 சதவீத பங்குகளை வைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது புதிதாக முதலீடு செய்யப்படும் தொகையின் மூலம் பேடிஎம் நிறுவனத்தில் அலிபாபாவின் பங்கு இருப்பு 40 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர உள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+