எளிமையான ஐடிஆர் விண்ணப்பம்.. மின்னணு வருமான வரி தாக்கல் ஏப்ரல் 1 முதல் துவக்கம்..!
மாத சம்பளக்காரர்களுக்கெனப் பிரத்தியேகமாக எளிமையான ஐடிஆர் விண்ணப்பத்தை வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி வருமான வரித்துறை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் சில இடங்களில் தகவல்களைக் குறிப்பிடுவதன் மூலம் வருமான வரியை தாக்கல் செய்யலாம்.
வருமான வரி தாக்கல்
அதேபோல், வருமானத்துடன், வட்டி வருமானம் உடையோர் மற்றும் வரி விலக்கு பெற விரும்புவோருக்கான தகவல்களைச் சமர்ப்பிக்கும் தளத்தை ஐடிஆர் 1 என்று அழைக்கப்படும் சாஹாஜ் படிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் 80சி, மெடிக்கிளைம் 80டி கீழ் வரும் வரி விலக்கு பெறும் குறிப்புகளும் ஐடிஆர் 1 படிவத்தில் உள்ளது.
18 பத்திகள்
புதிய ஐடிஆர் 1/ சாஹாஜ் படிவத்தில் 80சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு பெற சுமார் 18 பத்திகள் (columns) உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு தனிநபர் எல்ஐசி, பிபிஎப், வீட்டுக்கடனில் திரும்ப அளித்த தொகை எனப் பல பிரிவுகளின் கீழ் சுமார் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு வருமான வரி விலக்குப் பெறலாம்.
மேலும் மெடிக்கல் இன்சூரன்ஸ் தவணைக்கான தொகைக்கு 80டி சட்டத்தின் கீழ் வரி விலக்குப் பெறலாம்.
3 பக்க விண்ணப்பம்
ஏப்ரல் 1ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள வருமான வரி தாக்கல் படிவத்தில், 2 வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் செயலற்று கிடக்கும் வங்கி கணக்குகள் குறித்த விபரங்கள் நீக்கப்பட்டு 3 பக்க விண்ணப்பமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
6 கோடி பேர்
இந்தியாவில் 29 கோடி மக்களிடம் பான் எண் இருந்தாலும், வெறும் 6 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தி வருகின்றனர்.
More From GoodReturns

ஏப்ரல் 1 முதல்.. ATM சேவை, பான் கார்டு, 2FA, பாஸ்டேக்.. எக்கசக்க மாற்றங்கள்..!!

இனி நீங்கள் இழக்கப்போகும் வரிச் சலுகைகள் என்னென்ன? புதிய விதிகளால் லாபமா? நஷ்டமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications