இன்றே கடைசி.. ஜியோ, கருப்பு பணம், 500, 1000 ரூபாய் நோட்டு பரிமாற்றங்கள்..!
மார்ச் 31 ஒரு நிதியாண்டின் முடிவை விடவும் இன்று பல முக்கியச் சேவைகள் திட்டங்கள், சலுகைகள் முடிவிற்கு வருகிறது. இதைக் கடைசி நேரத்திலாவது தெரிந்துகொண்டு சலுகைகளைப் பெற்றிடுங்கள்.
முதலில் எந்த விஷயம்..
ஜியோ
கடந்த 6 மாதங்களாக இலவசங்களை அள்ளி வீசி வந்த ஜியோ டெலிகாம் சேவை நிறுவனத்தின் இலவசம் திட்டங்கள் மார்ச் 31ஆம் தேதியான இன்று முடிவடைகிறது.
நாளை முதல் ஜியோவின் சேவையைப் பயன்படுத்த வேண்டுமெனில் அதற்குக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதில் பிரைம் வாடிக்கையாளர்கள், சாதாரண வாடிக்கையாளர்களுக்கெனத் தனித்தனி கட்டணங்களை விதித்துள்ளது ஜியோ.
இலவசங்களுக்குப் பை பை...
மத்திய அரசின் திட்டம்
கருப்புப் பணம் அதாவது கணக்கில் காட்டப்படாத பணத்தை 45 சதவீத வரியாக ஒப்படைக்கவும், இதன் மூலம் எவ்விதமான வழக்கம், தண்டனையும் பெறப்படாது என மத்திய அரசு இந்தியாவில் கருப்புப் பணத்தை முழுமையாக ஒழிக்கும் முயற்சியில் Pradhan Mantri Garib Kalyan Yojana (PMGKY) என்ற சிறப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது.
மார்ச் 31
PMGKY திட்டத்தின் இணைய விரும்புவோருக்கு கடைசி நாள் மார்ச் 31. தற்போதைய நிலையில் இத்திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பணத்தில் அளவு 1,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில், இத்திட்டத்தில் சேராதவர்கள் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையின் சூட்டை ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து உணர்வார்கள் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வசதிகள்
மேலும் PMGKY திட்டத்தில் சேர வரும்புவோர் தங்களிடம் இருக்கும் கருப்புப் பணத்தை, பணமாகவோ, காசோலை, டிடி, அல்லது மின்னணு முறையில் கூட வங்கிகளுக்குச் சமர்ப்பிக்கலாம்.
இதற்கான வரியையும் எந்த முறையில் வேண்டுமானாலும் செலுத்தலாம்.
வரியும்.. வைப்பும்..
இத்திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்படும் பணத்தில் 50 சதவீதம் வரியாகவும், 25 சதவீத தொகையை ரிசர்வ் வங்கியிடம் 4 வருட வைப்பாக வைக்கப்படும். மீதமுள்ள தொகையைக் கணக்காளரே பயன்படுத்திக்கொள்ளலாம். இதுவே PMGKY திட்டத்தின் கட்டுப்பாடுகள்.
பி.எஸ்-3
ஏப்ரல் 1ம் தேதிக்குப் பிறகு பி.எஸ்-3 அடிப்படையில் தயாரான டூவீலர், கார்களை விற்பனை செய்வது மற்றும் ரிஜிஸ்டர் செய்வது கூடாது என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை நேற்று முன்தினம் பிறப்பித்தது.
மார்ச் 31
இந்நிலையில் மார்ச் 31ம் தேதிக்குள் பைக்குக்களை விற்பனை செய்ய ஷோரூம்களில் அதிரடி தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹீரோ, ஹோண்டா போன்ற நிறுவனங்கள்தான் அதிக அளவில் டிஸ்கவுண்டுகளை அறிவித்துள்ளன. பஜாஜ் நிறுவனம் டிஸ்கவுண்டோடு சேர்த்து இலவச இன்சூரன்ஸ்சும் செய்து கொடுப்பதாகக் கூறியுள்ளது.
சுற்றுச்சூழல் மாசு
புகை மாசுவை கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம், வாகனங்கள் வெளியிடும் மாசுகளின் அளவுகளை வரையறுத்து விதிமுறைகள் வகுத்து வெளியிட்டு வருகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகையைக் கட்டுப்படுத்த சில விதிமுறைகளை வகுத்து, பாரத் ஸ்டேஜ் (பி.எஸ்) 3 என்ற விதி முறை ஏற்கனவே அமலில் இருக்கிறது.
பி.எஸ்-4 விதிமுறை
கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாகன இன்ஜின் தயாரிக்கும் வகையில் பி.எஸ்-4 விதிமுறை, 2010முதல் நாடு முழுவதும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதிமுறை முழுமையாக அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்தது.
8.25 லட்சம் வாகனங்கள் தேக்கம்
நாளை முதல் பி.எஸ்.3 வகை வாகனங்களை விற்பனை செய்யவோ, ரிஜிஸ்டர் செய்யவோ முடியாது. சுமார் 8.25 லட்சம் வாகனங்கள் தேங்கியுள்ள
500,1000 ரூபாய் நோட்டுகள் பரிமாற்றம்
இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட டிசம்பர் 9, 2016 முதல் 30 டிசம்பர் 2016 காலகட்டத்தின் போது வெளிநாடுகளில் இருந்த என்ஆர்ஐ-க்கள் மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
இந்தத் திட்டத்திற்கும் மார்ச் 31 அதாவது இன்றே கடைசி நாள்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications