எஸ்பிஐ அறிமுகப்படுத்தும் உன்நத்தி கிரெடிட் கார்டு திட்டம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை..?

எஸ்பிஐ அறிமுகப்படுத்தும் உன்நத்தி கிரெடிட் கார்டு திட்டம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை..?

எஸ்பிஐ வங்கி கணக்கில் 25,000 ரூபாய் வைத்துள்ளிர்களா..? நீங்கள் ஆண்டுக் கட்டணம் கிரெடிட் கார்டு பெறலாம்.

டிஜிட்டல் பரிவர்த்தனிக்கு அதிகப் பயனர்கள் கொண்டு வர உன்நத்தி என்ற கிரெட்ட் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றது. இந்தத் திட்டத்தின் மூலம் எஸ்பிஐ வங்கி கணக்கில் 25,000 ரூபாய் வைத்துள்ளீர்கள் என்றால் ஆண்டுக் கட்டணம் இல்லாத கிரெடிட் கார்டு பெறலாம் என்று எஸ்பிஐ கார்டுகள் பிரிவின் முக்கிய அதிகாரியான விஜய் ஜாசுஜா தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் கிரெடிட் கார்டு பெற முந்தைய கணக்கு வரலாறு ஏதும் தேவையில்லை. வாடிக்கையாளர் அடையாள அட்டை, முகவரி சான்றிதழ் போன்ற KYC ஆவணங்களை மட்டும் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்தால் போதும், முதல் 4 வருடங்களுக்கு வங்கு கூடுதல் கட்டணம் எதையும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறாது.

எஸ்பிஐ எடுத்துள்ள இந்தப் புதிய முடிவால் கடன் அளிப்பதில் மாற்றங்கள் ஏற்படும். கிரெடிட் கார்டுகளைப் பயனர்கள் எளிதாகப் பெறுவதற்காகவும் இதில் உள்ள சிக்கல்களையும் இந்தப் புதிய திட்டம் போக்கும் என்றும் விஜய் தெரிவித்தார்.

மேலும் கிரெடி கார்டுகளில் உள்ள சிக்கல்களைக் குறைக்கும் விதமாக உன்நத்தி கிரெடிட் கார்டுகள் மூலம் கடன் வாங்குபவர்களுக்கு முதல் 12 மாதங்களுக்கு வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்தால் போதும். இது வரை கிரெடிட் ஸ்கோர் வைத்து அல்லது வங்கி பரிவர்த்தனைகள் வைத்துத் தான் கிரெடிட் கார்டு அளிக்கப்பட்டு வந்துள்ளது. இப்போது அந்த முறையும் மாற்றப்பட்டுள்ளது. 12 மாதங்களுக்குக் கடன் பெற்று இலவச டெபாசிட்கள் மூலமாகக் கடனை செலுத்தலாம்.

உன்நத்தி கிரெடிட் கார்டு என்றால் என்ன?

உன்நத்தி கிரெடிட் கார்டு என்றால் என்ன?

இது அனைவரும் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு போன்ற ஒரு கார்டே ஆகும். இந்தக் கார்டு வங்கி கணக்கில் குறைந்தபட்சம் 25,000 ரூபாய் வரை இருப்புத் தொகையாக வைத்து இருக்க வேண்டும். மேலும் முதல் 4 வருடங்களுக்கு ஆண்டுக் கட்டணமான 499 ரூபாயில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

வெகுமதி புள்ளிகள் உண்டா?

வெகுமதி புள்ளிகள் உண்டா?

ஒவ்வொரு முறை 100 ரூபா செலவு செய்யும் போது 1 வெகுமதி புள்ளி கிடைக்கும். இது கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பது, எரி பொருள் வாங்குவது, இஎம்ஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்வது போன்றவற்றிற்கு வெகுமதி புள்ளிகள் கிடையாது.

எரிபொருள் வாங்கும் போது வழங்கப்படும் 2.5 சதவீதம் கூடுதல் கட்டணம் 500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு வழங்கப்படும். அதிகபட்சமாகக் கூடுதல் கட்டணம் வைவர் ஒரு முறை பெரும் மாத ரசீதுக்கு 100 ரூபாய் வரை வழங்கப்படும்.

 

எங்கெல்லாம் பயன்படுத்தலாம்?

எங்கெல்லாம் பயன்படுத்தலாம்?

உன்நத்தி க்ரெடிட் கார்டுகளை உலகளவில் 24 மில்லியன் மையங்களிலும், இந்தியாவில் உள்ள 3,25,000 மையங்களிலும் பயன்படுத்தலாம். விசா மற்றும் மாஸ்டர் காடுகள் மூலம் பரிவர்த்தனை செய்யக்கூடிய அனைத்து இடங்களிலும் பரிவர்த்தனை செய்யலாம்.

பிற நன்மைகள்

பிற நன்மைகள்

பயன்பாட்டு நிலுவைத் தொகை செலுத்துதல் அதாவது தொலைப்பேசி கட்டணம், மின்சாரக் கட்டணம் , 2500 ரூபாய்க்கும் அதிகமாகச் செய்யும் பரிவர்த்தனைகளைச் சலுகை முறையில் செலுத்த இஎம்ஐ போன்ற கூடுதல் நன்மைகள் அளிக்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+