ஏப்ரல் 1 முதல் உங்களுக்கு இந்த செலவுகள் எல்லாம் அதிகரிக்கும் என்று தெரியுமா..?
புதிய நிதி ஆண்டு நாளை முதல் துவங்கும் நிலையில் வரும் நிதி ஆண்டில் பல விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இந்தச் சேவைகளுக்கு எல்லாம் கட்டணம் உயர்த்தப்படுகின்றது, சிலவற்றுக்கு அபராதமும் விதிக்கப்பட உள்ளது. எனவே வரும் நிதி ஆண்டு முதல் ஏற்பட இருக்கும் மாற்றங்களை எல்லாம் உங்களுக்குத் தெரிவிப்பது எங்கள் கடமை ஆகும்.
சுகாதாரக் காப்பீடு மற்றும் வாகன காப்பீடு
புதிய நிதி ஆண்டு முதல் சுகாதாரக் காப்பீடு மற்றும் வாகன காப்பீடு பிரீமியம் தொகை உயர்த்தப்படும். இதற்கான அனுமதியை ஐஆர்டிஏ, காப்பீட்டு ஒழுங்குபடுத்தும் ஆணையம் வழங்கியுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கான மூன்றாம் தரப்பு காப்பீட்டுப் பிரீமியம் விலை 40 முதல் 50 சதவீதம் வரை வருகின்ற ஏப்ரல் 1 முதல் உயருகின்றது. முழு விவரங்களுக்கு இங்குக் கிளிக் செய்க
பணப் பரிவர்த்தனை கட்டணம்
பணப் பரிவத்தனை வரம்பு 2 லட்சமாகக் குறைப்பு
2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ரொக்கப் பணப் பரிவர்த்தனை செய்தால் சட்டவிரோதமது என்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு பட்ஜெட் 2017-18-ஐ பிப்ரவரி 1-ம் தேதி அருண் ஜெட்லி அவர்கள் வாசித்த போது ரொக்கப் பணப் பரிவர்த்தனை 3 லட்சமாகக் குறைக்கப்படும் என்று அறிவித்தார். இப்போது என்னவென்றால் வருமான வரிச் சட்டத்தில் இரண்டு லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இங்குக் கிளிக் செய்க.
வருமான வரி
வருமான வரி செலுத்த வேண்டியவர்கள் இனி காலதாமதமாக வரி தாக்கல் செய்தால் 10,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும். ஆனால் அது நடப்பு நிதி ஆண்டில் அல்ல, 2018-2019- நிதி ஆண்டு முதல்.
நிதி மசோதா 2017-ன் படி புதிய பிரிவு 234F-ன் கீழ் வருமான வரிச் சட்டத்தில் சரியான நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் 2018-2019-ம் நிதி ஆண்டு முதல் அபராதம் விதிக்க வேண்டும் என்று சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இங்கு இளிக் செய்க.
அதுமட்டும் இல்லாமல் வருமான வரி செலுத்தும் போது வீட்டுக் கடன் மீதான வரி விலக்கு 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications