40 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் இந்த அளவிற்குக் குறைந்துள்ளது என்று தேசிய சேமிப்பு நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கின்றது.
2017 ஏப்ரல் 1 முதல் மத்திய அரசு பிபிஎப் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை 0.1 சதவீதமாகக் குறைத்துள்ளது. இந்த வட்டி விகித குறைப்பினால் பொது வருங்கால வைப்பு நிதி திட்டமான பிபிஎப் திட்டத்தில் 7.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் இந்த அளவிற்குக் குறைந்துள்ளது என்று தேசிய சேமிப்பு நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கின்றது.
தேசிய சேமிப்புப் பத்திரங்கள்
5 வருட தேசிய சேமிப்பு பத்திரத்தின் வட்டி விகிதமும் 7.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பிபிஎப் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரத்தின் வட்டி விகிதம் சென்ற காலாண்டு வரை 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
செல்வ மகள் திட்டம்
சுகன்யா சம்ரிதி திட்டம் எனப்படும் பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமான செல்வ மகள் திட்டத்தில் 8.5 சதவீதமாக இருந்து வந்த வட்டி விகிதம் 8.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சென்ற ஆண்டு முதல் ஒவ்வொரு காலாண்டிற்கும் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தைக் குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்போது 2016-2017 ஆண்டிற்கான 4 வது காலாண்டு முடிந்துள்ள நிலையில் 2017-2018 நிதி ஆண்டிற்கான காலாண்டில் இந்த மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக நிதி அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
கிசான் விகாஸ் பத்திரம்
கிசான் விகாஸ் பத்திர திட்டத்தின் வட்டி விகிதத்தையும் மத்திய அரசு இதே போன்று 7.7 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதம் வரை குறைத்துள்ளது.
பிற திட்டங்கள்
இதே போன்று மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், ஐந்து வருட தேசிய சேமிப்புப் பத்திரம் உள்ளிட்ட திட்டங்களுக்கும் முறையே 8.4 சதவீதம் மற்றும் 7.9 சதவீதமாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி ஆணையம்
ஓய்வூதிய திட்டத்தை நிர்வகிக்கும் வருங்கால வைப்பு நிதி ஆணையமாம் இதற்கு முன்பு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை முடிவு செய்து வந்தது. இப்போது அது மாற்றப்பட்டுள்ளது.
சியாமளா கோபிநாத் தலைமையிலான குழு தான் இம்முறை சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications