ஒரு நாளுக்கு 5 கோடி வருமானம்.. வசூல் மழையில் விராட் கோலி..!

இந்திய பிரபலங்களில் விளம்பரங்களுக்கு அதிகமான சம்பளம் வாங்குபவர் இவர் தான்.. எவ்வளவு தெரியுமா..?

இந்திய பிரபலஙளில் விளம்பரங்களில் நடிக்க அதிகச் சம்பளம் வாங்குபவர்கள் என்றால் அது 28 வயதான கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி என்றால் நம்ப முடிகின்றதா? சென்ற ஆண்டு வரை முதல் இடத்தில் இருந்து வந்த தோனியை பின்னுக்குத்தள்ளி கோஹ்லி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான கோஹ்லி ஒரு நாளைக்கு 2.5 கோடி, 4 கோடி எனச் சம்பளம் பெற்றுவந்துள்ளார். இப்போது கோல நிறுவனமான பெப்ஸிகோ நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க இவருக்கு ஒரு நாளைக்கு 5 கோடிகள் வரை அளிக்கத் தயாராக இருக்கின்றனர். ஆனால் இந்த நிறுவனத்தின் மீது சுகாதாரத்திற்குக் கேடான பானம் என்றும் புகார்கள் தொடர்ந்து வந்துள்ளதால் கோஹ்லி முடிவை எடுக்கவில்லை என்று கூறி வருகின்றனர்.

உறுதி செய்யப்பட்ட கட்டண உயர்வு

உறுதி செய்யப்பட்ட கட்டண உயர்வு

கோஹ்லி தனது விலையை உயர்த்தி இருப்பதை இரண்டு நிறுவனங்களின் அதிகாரிகள் உதவி செய்திருந்தாலும் எவ்வளவு என்பது இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் முன்னால் கிரெக்கெட் கேப்டன் தோனி உச்சத்தில் இருந்த போது பெற்றதை விட அதிகம் என்றும், பாலிவுட் நட்சத்திரங்களான ரன்வீர் சிங் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோரை விட அதிகம் என்றும் மட்டும் கூறப்படுகின்றது.

 

பெப்ஸியுடனான ஒப்பந்தம்

பெப்ஸியுடனான ஒப்பந்தம்

விராத் கோஹ்லியை விளம்பரத்திற்காகப் புக் செய்யும் கார்னர் ஸ்டோன் என்ற நிறுவனம் பெப்சிகோ நிறுவனத்துடனான ஒப்பந்தம் பற்றிக் கருத்து கூற மருப்புத் தெரிவித்துவிட்டது.

பெப்ஸிகோ நிறுவன விளம்பரங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தம் விராத் கோஹ்லிக்கு எப்ரல் 30-ம் தேதி வரை இருக்கின்றது என்றும், அதனை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

 

அதிகரிக்கும் செலவு தயங்கும் நிறுவனங்கள்

அதிகரிக்கும் செலவு தயங்கும் நிறுவனங்கள்

பொதுவாக ஒருவரை நிறுவனங்கள் விளம்பரத்திற்காக ஒப்பந்த செய்யும் போது ஆண்டுக்கு 2 முதல் நான்கு நாட்கள் வரை ஒப்பந்த செய்யும் என்றும், ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் என்றால் 20 கோடிகள் வரை செலவாகும் என்று சில நிறுவனங்கள் தயங்குகின்றன என்றும் கூறப்படுகின்றது.

தோனியுடனான ஒப்பந்தம்

தோனியுடனான ஒப்பந்தம்

எப்போதும் கிரிக்கெட் அணி கேப்டன்களை விளம்பரத்திற்குப் புக் செய்யும் பெஸிகோ தோனிட்யுடனான 11 வருட ஒப்பந்தத்தைச் சென்ற ஆண்டுடன் முடித்துக்கொண்டது.

இந்திய பிரபலங்களில் அதிகம் கட்டணம் பெறும் டாப் 5 நபர்கள்

இந்திய பிரபலங்களில் அதிகம் கட்டணம் பெறும் டாப் 5 நபர்கள்

விராத் கோஹ்லி 5 கோடி ரூபாய், தோனி, ஷாருக்கான, அமிர்கான் ஆகியோர் 3 முதல் 3.5 கோடி மற்றும் பிவி சிந்து 1 முதல் 1.25 கோடி வரை விளம்பரத்தில் நடிக்கக் கட்டணமாகப் பெறுகின்றார்.

18 பிறாண்டுகளில் கோஹ்லி

18 பிறாண்டுகளில் கோஹ்லி

சென்ற ஆண்டு முதல் முறையாகக் கோஹ்லி ஜெர்மன் ஸ்போர்ட்ஸ் நிறுவனமான பூமா 8 வருடத்திற்கு 110 கோடி ரூபாய் கொடுத்து புக் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் இல்லாமல் ஆர்டி கார், எம்ஆர்எப், டிஸ்கான் வாட்ச், ஜியோனி போன், பூஸ்ட், கோல்கேட், விக்ஸ் உள்ளிட்ட 18 நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

முதல் இடத்தில் கோஹ்லி

முதல் இடத்தில் கோஹ்லி

உலக அளவில் விளையாட்டு வீரர்களில் 92 மில்லியன் டாலர் வருமானத்துடன் கோஹ்லி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

சாக்கர் ஐகான் கிறிஸ்டியானோ ரொனால்டோ

சாக்கர் ஐகான் கிறிஸ்டியானோ ரொனால்டோ

சென்ற ஆண்டுச் சாக்கர் ஐகான் கிறிஸ்டியானோ ரொனால்டோ88 முக்ல்லியன் டாலருடன் முதல் இடத்தைப் பிடித்து இருந்தார். இதில் 32 மிலியன் டாலர் விளம்பரங்களில் இருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

லியோனல் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி

சென்ற ஆண்டுப் போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் 81.4 மில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்தை லியோனல் மெஸ்ஸி பிடித்திருந்தார். இதில் 28 மில்லியன் டாலர் விளம்பரம் மூலமாகப் பெற்ற வருமானம் ஆகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+