சம்பளத்தில் 2 மடங்கு உயர்வு.. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல்-க்கு அடித்தது 'யோகம்'..!

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னரான உர்ஜித் பட்டேல்-இன் சம்பளம் இந்த ஆண்டு மாதம் 90,000 ரூபாயில் இருந்து 2.5 லட்சமாக உயர்ந்துள்ளது. இது கடந்த வருடத்தில் அவருக்கு அளித்த சம்பளத்தை விடவும் சுமார் 2 மடங்கிற்கும் அதிகமாகும்.

சம்பள உயர்வு

சம்பள உயர்வு

2016, ஜனவரி 1ஆம் தேதி முதல் ரிசர்வ வங்கியின் கவர்னர் மற்றும் துணை கவர்னர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

அடிப்படை சம்பளம்

அடிப்படை சம்பளம்

இதன் படி கடந்த வருடம் கவர்னருக்கு அளிக்கப்பட்ட அடிப்படை சம்பளமான 90,000 ரூபாய், துணை கவர்னருக்கு அளிக்கப்பட்ட 80,000 ரூபாய் அளவிலான சம்பளங்கள் தற்போது உயர்ந்துள்ளது.

மிகவும் குறைவு

மிகவும் குறைவு

நாட்டின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியின் கவர்னர், துணை கவர்னர்களின் புதிய சம்பளத்தை ஒப்பிடும் போதும் இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வணிக வங்கி தலைவர்களின் சம்பளம் மிகவும் அதிகம்.

இதன் படி தற்போது ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர்களின் 80,000 ரூபாய் சம்பளத்தை 2.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

ஜனவரி 1, 2016

ஜனவரி 1, 2016

இப்புதிய சம்பள உயர்வு அதிகாரிகளுக்கு 2016 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து அமலாக்கம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பை பிடிஐ செய்தியாளர்கள் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பிதன் மூலம் இந்த ஆர்பிஐ பதில் அளித்துள்ளது.

பட்டேல் சம்பளம்

பட்டேல் சம்பளம்

கடந்த வருடத்தில் ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் பட்டேல்-இன் அடிப்படை சம்பளமாக 90,000 ரூபாயும், டிஏ 1,12,500 ரூபாயாகவும், இதர படியில் 7,000 ரூபாய் என மாதம் 2,09,500 ரூபாய் வரை பெற்றார்.

தற்போது இப்புதிய சம்பள உயர்வின் மூலம் இனி பட்டேல் மாதம் 3.70 லட்சம் ரூபாய் வரையில் சம்பளமாகப் பெறுவார்.

 

செப்டம்பர்

செப்டம்பர்

2016ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதத்தில் கவர்னராகப் பதவியேற்றிய உர்ஜித் பட்டேல் அக்டோபர் மாதத்தில் 2.09 லட்சம் ரூபாய்ச் சம்பளமாகப் பெற்றார்.

முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜனும் இதே சம்பளத்தைத் தான் பெற்றார்.

 

துணை கவர்னர்கள்

துணை கவர்னர்கள்

தற்போது ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக ஆர். காந்தி, எஸ்எஸ் முத்ரா, என்எஸ் விஸ்வநாதன் மற்றும் விரால் வி ஆச்சாரியா ஆகியோர் பதவிவகித்து வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+