ஏர் ஏசியாவின் மெகா சேல்.. 1,249 ரூபாயில் விமான பயணம்..!
ஏர் ஏசியா இந்தியா அனைத்தும் உள்ளடக்கப்பட்ட விமான டிக்கெட் கட்டணத்தை 1,249 ரூபாயாக அறிவித்துள்ளது. இந்த ஏர் ஏசியாவின் மெகா சேல் மூலமாகப் பெங்களூரு, கொச்சி, டெல்லி உள்ளிட்ட பல வழித்தடங்களில் சலுகை கட்டணங்களை அறிவித்துள்ளது.
ஏர் ஏசியா மெகா சேல் ஆஃபர் மூலமாக 2017 செப்டம்பர் 30 வரையிலான பயணங்களுக்கு 2017 ஏப்ரல் 9-ம் தேதி வரை டிக்கெட் புக் செய்யலாம்.
இந்தச் சலுகை ஏர் இந்தியா, இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட், விஸ்தரா உள்ளிட்ட ஏர் லைன்ஸ் நிறுவனங்களின் ஆஃபர்களுக்குப் போட்டியாக இந்த ஆஃபரை ஏர் ஏசியா இந்தியா அறிவித்துள்ளது.
ஆஃபர் கட்டணங்கள்
ஏர் ஏசியாவின் 1,249 ரூபாய் ஆஃபர் விலையில் கவுகாத்தியில் இருந்து இம்பால் வரை செல்லலாம். ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு செல்ல 1,499 ரூபாய், ராஞ்சியில் இருந்து கொல்கத்தா செல்ல 2,149 ரூபாய், பெங்களூருவில் இருந்து கோவா செல்ல 1,619 ரூபாய், கொச்சியில் இருந்த பெங்களூரு செல்ல 1,949 ரூபாய், ராஞ்சியில் இருந்து டெல்லி செல்ல 2,499 ரூபாய் என ஏர் ஏசியா இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் போட்டி
விமானப் போக்குவரத்துத் துறையில் பல பெரிய நிறுவனங்கள் போட்டி போடும் நிலையில் டிக்கெட் விலை சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதே நேரம் ஏர் கார்னிவல், ஜூம் ஏர் போன்ற புதிய விமான நிறுவனங்கள் தங்களது சேவையைத் துவங்கியுள்ளன.
பிற நிறுவனங்களின் ஆஃபர்
சென்ற மாதம் கோஏர் நிறுவனம் 500 ரூபாய் ஆஃபர் அறிவித்தது. அதே போன்று ஏர் ஏசியா நிறுவனமும் 20 சதவீத டிக்கெட் விலையில் ஆஃபர் விலையை அறிவித்துள்ளது.
விமானப் போக்குவரத்து
விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆஃபர்களை அறிவித்து வருவதினால் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை 16 சதவீதம் கடந்த ஒரு வருடத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications