விரைவில் ஓலா டாக்ஸி புக் செய்து யூபிஐ மூலமாக பணம் செலுத்தலாம்..?
ஸ்மார்ட்போன் செயலி மூலமாக டாக்ஸி சேவை அளித்து வரும் ஓலா நிறுவனம் விரைவில் ஒருங்கிணைக்கப்பட்ட கொடுப்பனவு இடைமுகம் (UPI) பணப் பரிவர்த்தனை செயலி மூலமாகப் பணம் செலுத்து முறையை அறிமுகப்படுத்துகின்றது.
இந்த இணைப்பின் மூலம் ஓலா வாடிக்கையாளர்கள் யூபிஐ ஐடி பயன்படுத்திப் பயணத்திற்கான கட்டணத்தைச் செலுத்தலாம் என்றும் ஓலா நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓலா மனி நிறுவனத்தின் தலைவர் இதுபற்றிக் கூறுகையில் யூபிஐ செயலி மூலம் பணப் பரிவர்த்தனை செய்தால் மிக வேகமாகப் பணப் பரிவர்த்தனை நடக்கின்றது. அதனால் யூபிஐ செயலியை ஓலா செயலியில் இணைப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருவதாக எஸ்பிவி பல்லவ் சிங் கூறியுள்ளார்.
இதனால் விரைவில் ஓலா செயலியில் கேஷ், டெபிட்/கிரெடிட் கார்டு மற்றும் ஓலா மனி போன்று'பே பை யூபிஐ' என்ற தெரிவும் இருக்கும் என்று ஓலா நிறுவன வட்டாரம் கூறுகின்றது.


Click it and Unblock the Notifications