மோடி சொன்னதை தான் 'சூப்பர் ஸ்டார்' செய்தார்..!

மோடி சொன்னதைத் தான் செய்தார் 'ரஜினி'.. எந்திரன் 2.0 படத்தில் இது தனிசிறப்பு..!

சென்னை: உலகளவில் அதிகத் திரைப்படங்களைத் தயாரிப்பதிலும், வெளியிடுவதிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்றால் மிகையாகாது. இந்திய மக்கள் மத்தியில் திரைப்படங்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய வரவேற்பு உள்ளதே இதற்கு முக்கியக் காரணம்.

அதிலும் பெரிய பட்ஜெட் படம் என்றால் பாரின் லெகேஷன், பாரின் டெக்னிஷன், பாரின் நிறுவனத்தின் கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

எந்திரன் 2.0

எந்திரன் 2.0

அடுத்தச் சில மாதங்களில் வெளியாக உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமாக எந்திரன் 2.0 (Robot 2.0) முழுக்கமுழுக்க இந்தியாவிலும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகளும் கூட இந்திய நிறுவனங்களால் செய்யப்பட்டு வருகிறது.

 

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

பொதுவாக இயக்குநர் ஷங்கர் வெளிநாடுகளிலும், வெளிநாட்டு நிறுவனங்களைத் தனது படத்திற்குப் பயன்படுத்தும் ஒருவர்.

அக்டோபர் மாதத்தில் ஜப்பானீஸ், கொரியன், மேன்டரின் உட்பட 7 மொழிகளில் வெளியாகும் இந்தத் திரைப்படம் மேக் இன் இந்தியா திரைப்படம் என்பது இந்திய திரைப்படத் துறையில் புதிய முயற்சி என்றே தான் சொல்ல வேண்டும்.

 

மோடி

மோடி

இந்தியாவில் உற்பத்தி மற்றும் சேவை துறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பிரதமர் மோடி அறிவித்த முக்கியத் திட்டமான மேக் இன் இந்தியா-வின் மூலம், நாட்டில் ஆயுத உற்பத்தி முதல் விமான உற்பத்தி வரை தற்போது இந்திய தொழிற்துறை வளர்ந்து வருகிறது.

அந்த வகையில் திரைப்படத் துறையும் மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைந்துள்ளது.

 

லைகா நிறுவனத்தின்

லைகா நிறுவனத்தின்

எந்திரன் 2.0 படத்தைத் தயாரிக்கும் ராஜூ மகாலிங்கம் எக்னாமிக்ஸ் டைம்ஸுக்கு பேட்டி அளிக்கும் போது, இப்படம் முழுக்கமுழுக்க டெல்லி மற்றும் சென்னையில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், சென்னையில் ஈவிபி பிலிம் சிட்டி ஆகியவற்றில் தான் இப்படம் முழுமையாகப் படம்பிடிக்கப்பட்டது என் கூறினார்.

 

3டி டெக்னாலஜி

3டி டெக்னாலஜி

அனைத்தையும் தாண்டி தற்போது உலக தரம் வாய்ந்த 3டி தொழில்நுட்பத்தையும் இந்தியாவில் இருக்கும் நிறுவனத்தை இப்படத்தில் பயன்படுத்தியுள்ளோம் எனக் கூறினார்.

நல்ல துவக்கம்

நல்ல துவக்கம்

இந்தியாவில் ஆயுதங்கள், கப்பல், விமானம், தொழில்நுட்பம் அனைத்தும் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தயாரித்து வெளிநாட்டு ஏற்றுமதி செய்வது போல் திரைப்படத் துறைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் எந்திரன் 2.0 ஒரு நல்ல துவக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+