வேகமான 4ஜி சேவை.. ஏர்டெல், வோடாபோன், ஐடியாவை துரத்தி அடிக்கும் ஜியோ: டிராய் அதிரடி அறிக்கை

வேகமான 4ஜி சேவை.. ஏர்டெல், வோடாபோன், ஐடியாவை துரத்தி அடிக்கும் ஜியோ: டிராய் அதிரடி அறிக்கை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஏர்டெல், ஜியோ இடையில் ஏற்பட்டு வரும் இந்தியாவின் வேகமான 4ஜி நெட்வொர்க் சேவை எது என்பதற்கான போட்டிக்கு முடிவுகட்டியுள்ளது.

 

ஏர்டெல் நிறுவனம் ஓக்லாவின் அறிக்கை படி இந்தியாவின் வேகமான நெட்வொர்க் நாங்கள் தான் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு விளம்பரம் செய்து வந்தது. இதைக் கண்ட ஜியோ அது பொய்யான அறிக்கை என்றும் அந்த அறிக்கையில் குளறுபடி உள்ளது என்றும் புகார் அளித்தது.

பின்னர் அது ஓக்லா, ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் இடையே வார்த்தை போர் வரக் காரணமானது. ஜியோ நெட்வொர்க் வார்த்தைகளை நாங்கள் நம்பத் தயாராகில்லை எங்களுக்குச் சரியான முடிவு வேண்டும் கேள்வி கேட்க ஆரம்பித்தது.

இது ஏர்டெல் நிறுவனத்திற்குப் பெறும் சிக்கலாக உருவெடுத்து, இந்தியாவின் வேகமான 4ஜி நெட்வொர்க் சேவை ஏர்டெல் இல்லை என்பதை ஜியோ நிரூபித்ததும் விட்டது.

எப்படி வேகமான 4ஜி சேவை என்று கணக்கிடப்படுகின்றது?

எப்படி வேகமான 4ஜி சேவை என்று கணக்கிடப்படுகின்றது?

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் மார்ச் மாதம் நடத்திய ஆய்வின் படி வேகமான 4ஜி நெட்வொர்க் சேவை அதிலும் இணையதளத்தில் பதிவிறக்கும் வேகம் எது என்று வெளியிட்டுள்ளது.

ஜியோ தான் வேகமான நெட்வொர்க்

ஜியோ தான் வேகமான நெட்வொர்க்

டிராயின் அறிக்கை படி இந்தியாவின் வேகமான 4ஜி நெட்வொர்க் சேவை ஜியோ தான் என்றும், பிப்ரவரி மாதமும், ஜியோ தான் வேகமான இண்டெர்னெட் சேவையை அளித்துள்ளது என்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

பதிவிறக்கும் வேகம்
 

பதிவிறக்கும் வேகம்

ஜியோ அதிகபட்சமாக 15 Mbps வேகத்தில் முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் ஐடியா 8.1 Mbps வேகத்திலும், நாங்கள் தான் முதல் இடம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்ட ஏர்டெல் 7.8 Mbps வேகத்துடன் மூன்றாவது இடத்திலும், 5.8 Mbps வேகத்துடன் வோடாபோன் நான்காவது இடத்திலும், 3.4 Mbps வேகத்துடன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஐந்தாவது இடத்திலும், 2.5 Mbps வேகத்துடன் டாடா டொகோமோ 6 வது இடத்திலும், 2.4 Mbps வேகத்துடன் பிஎஸ்என்எல் 7 வது இடத்திலும், 2.1 Mbps வேகத்துடன் ஏர்செல் 8 வது இடத்திலும், 1.1 Mbps வேகத்துடன் எம்டிஎன்எல் 9 வது இடத்தையும் பிடித்துள்ளது.

பதிவேற்ற வேகம்

பதிவேற்ற வேகம்

பதிவிறக்கும் வேகத்தில் ஜியோ முன்னிலை வகித்தாலும் பதிவேற்றுவதில் அதாவது அப்லோடு ஸ்பீடு பட்டியலில் ஐடியா 4.3 Mbps வேகத்துடன் முதல் இடத்தையும், வோடாபோன் 3.4 Mbps வேகத்துடன் 2வது இடத்திலும், ஜியோ 3.2 Mbps வேகத்துடன் 3வது இடத்திலும், ஏர்டெல் 3.2 Mbps வேகத்துடன் 4வது இடத்திலும், டாடா டொகோமோ 1.6 Mbps வேகத்துடன் 5வது இடத்திலும், ரிலையன்ஸ் 1.3 Mbps வேகத்துடன் 6வது இடத்திலும், பிஎஸ்என்எல் 1.0 Mbps வேகத்துடன் 7 வது இடத்திலும், ஏர்செல் 0.9 Mbps வேகத்துடன் 8வது இடத்திலும், எம்டிஎன்எல் 0.2 Mbps வேகத்துடன் 9 வது இடத்தையும் பிடித்துள்ளது.

ஜியோ பதிவேற்ற வேகத்தில் முன்னேற்றம்

ஜியோ பதிவேற்ற வேகத்தில் முன்னேற்றம்

பதிவேற்ற வேகத்தில் பிப்ரவரி மாதம் இருந்ததை விட மார்ச் மாதம் 2.208-ல் இருந்து 3.3 Mbps வகமாக ஜியோவின் வேகம் அதிகரித்துள்ளதாக டிராய் குறிப்பிட்டுள்ளது.

படம் பதிவிறக்குவது

படம் பதிவிறக்குவது

ஜியோ நெட்வொர்க் அதிகம் என்பதால் ஒரு படத்தை இணையதளத்தில் இருந்து 5 நிமிடத்தில் பதிவிறக்க முடியம் என்றால் சும்மாவா என்கின்றது ஜியோ தரப்பு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TRAI Has Declared The Fastest 4G Network In India It’s Not Airtel! Check Out Who Tops The List

TRAI Has Declared The Fastest 4G Network In India It’s Not Airtel! Check Out Who Tops The List
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X