மும்பை: ஒவ்வொரு நிதியாண்டின் முடிவில் நிறுவனங்கள் தங்களது லாப அளவீடுகளைப் பார்க்க ஆர்வமாக இருப்பது போல் நிறுவனத்தின் ஊழியர்களும் அவர்களுக்கான சம்பள உயர்வைப் பெறவும் ஆவலாக இருப்பார்கள்.
இந்த வகையில் ஒவ்வொரு வருடமும் எந்தத் துறையில் அதிகப்படியான சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது என ஆய்வு செய்து வரும் கேபிஎம்ஜி இந்த வருடத்திற்கான ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈகாமர்ஸ்
எப்போதும் இப்பட்டியலில் வங்கித் துறை, ஐடி துறை, எப்எம்ஜிசி துறை இடம்பெறும் நிலையில் இந்த முறை ஈகாமர்ஸ் துறை முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
12.5% ஊதிய உயர்வு
இந்திய ஈகாமர்ஸ் துறையில் வர்த்தகப் பாதிப்பு, நிதிப் பற்றாக்குறை எனக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துக் கொண்டு இருக்கும் இந்தச் சூழ்நிலையிலும் இத்துறை ஊழியர்களுக்கு 12.5 சதவீதம் என்ற விகிதத்தில் அதிகப்படியான சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் வெளியேற்ற விகிதம்
இதனுடன் இத்துறையில் ஊழியர்கள் வெளியேற்ற விகிதமான அட்ரிஷன் விகிதமும் சதவீதமாக உள்ளது என் கேபிஎம்ஜி ஆய்வுகள் கூறுகிறது.
வாடிக்கையாளர் சேவை
அடுத்த 2 அல்லது 3 காலாண்டுகளுக்கு இத்துறை நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவை அளித்துத் தொடர்ந்து வர்த்தக உயர்வை அடையும் வகையில் செயல்படத் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக இத்துறையில் பணியாற்றும் சிறந்த ஊழியர்களுக்கு அதிகளவிலான சம்பளத்தை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications