டெல்லி: ஒவ்வொரு வருடமும், போலியான மதிப்பில் வீட்டு வாடகை ரசீது கொண்டு அதிகளவிலான வருமானத்திற்கு வரி விலக்கு பெறுவது மாத சம்பளக்காரர்களுக்கு ஒரு வழக்கமாக மாறியுள்ளது.
இது உண்மையில் சட்டத்திற்கு எதிரானது என்பது அனைவருக்கும் தெரிந்தும், வருமான வரி செலுத்தும் தனிநபர் வரி விலக்கு பெறுவதற்காகத் தங்களது வருமானத்தைக் குறைக்கும் ஒரு கருவியாக இந்தப் போலி வீட்டு வாடகை ரசீதைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இனி இந்த வழியைப் பயன்படுத்த முடியாது.
60 சதவீத வருமானம்
மாத சம்பளக்காரர்களுக்குத் தாங்கள் பணிபுரியும் நிறுவனம் வீட்டு வாடகை கொடுப்பனவு அளிக்கிறது. இதன் மூலம் ஒருவர் தங்களது வருமானத்தில் 60 சதவீத தொகையை வீட்டு வாடகையாகக் கணக்கு காட்டி வருமானத்தில் வரி விலக்கு பெற முடியும்.
வருமான வரித் துறை
மக்களின் முழுமையான வருமானத்திற்கு முறையாக வரி வசூலிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள வருமான வரித் துறை, தற்போது மக்கள் பயன்படுத்தி வரும் சட்டத்திற்கு எதிரானது வழிகளை அடைந்து வருகிறது.
இதன் பிடி இனி, வருமான வரித்துறை நினைத்தால், ஒரு நபர் தான் குடியிருக்கும் வீட்டிற்கும், அளிக்கப்படும் வாடைக்கான முறையான ஆதாரங்களைக் கோரவும் முடிவுசெய்துள்ளது.
ஆதாரங்கள்
எனவே இனி வீட்டு வாடகை பெயரில் அதிகளவில் வருமான வரி விலக்கு பெற திட்டமிட்டுள்ள தனிநபர், வாடகை ஒப்பந்தம், மின்சாரக் கட்டண அறிக்கை, குடிநீர் கட்டண அறிக்கை, எனப் பல ஆதாரங்களைக் குடியிருப்பு வாரியத்திடம் ஒப்புதல் பெற்ற விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாத சம்பளக்காரர்கள்
தற்போது மாத சம்பளக்காரர்கள் மத்தியில், குறைந்த வருமானம் உடையோர் அதிகப்படியானோர் போலியாக வீட்டு வாடகை ரசீதை மட்டும் சமர்ப்பிக்கின்றனர்.
போலித்தனம்..
சில ரசீதுகள் முழுமையாகப் போலி உள்ளது, உண்மையான ரசீதாக இருந்தாலும் அதில் குறிப்பிட்டுள்ள வாடகையின் அளவு போலியாக உள்ளது. இதன் மூலம் அதிகளவிலான வருமான வரி மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.
ஓரே குடும்பம்
அனைவருக்கும் மேலாக ஓரே குடும்பத்தில் இருக்கும் ஒரு நபர் வீட்டுக் கடனுக்கு அளிக்கப்பட்ட பணத்திற்கு வரிவிலக்கு கோருகிறார், மற்றொருவர் போலி வீட்டு வாடகை ரசீது மூலம் வரி விலக்கு பெறுகிறார் என்று வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
விரைவில்
மாத சம்பளக்காரர்கள் தங்களது நிறுவனத்தில் பெறப்படும் வீட்டு வாடகை கொடுப்பனவு அளவில் பெறப்படும் சலுகைகளை எப்படி முறையாகக் கணக்கிடுவது, அதற்கான ஆதாரங்களை எப்படிக் கோருவது என வருமான வரித்துறை திட்டமிட்டு வருகிறது.
இதன் மூலம் அடுத்தச் சில மாதங்களில் இதுகுறித்து வருமான வரித்துறை அறிவிப்புகளை வெளியிடலாம்.


Click it and Unblock the Notifications