தீயாய் வேலை செய்யும் வருமான வரித்துறை.. இலக்கை விட 18% அதிக வரி வசூல்..!
டெல்லி: எப்போது இல்லாத வகையில் இந்திய அரசு அதிகளவிலான வருமான வரியை வசூலைச் செய்துள்ளது. பட்ஜெட் 2017இல் மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் தனது வரி வசூல் அளவை ரூ.16.97 லட்சம் கோடியாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2017ஆம் நிதியாண்டில் மத்திய அரசு சுமார் 17.10 லட்சகம் கோடி ரூபாய் அளவிலான தொகையை வரி வசூலாகச் செய்துள்ளது.
நிதியமைச்சகம்
இந்த வருடம் வரி வசூல் அளவு 17.10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டு உடன் ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் அதிகமாகும். அதுமட்டும் அல்லாமல் இது கடந்த 6 வருடத்தில் அதிகமானது என்று வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக்த் ஆதியா தெரிவித்துள்ளார்.
நேரடி வரி, மறைமுக வரி
ஏப்ரல்-மார்ச் மாத காலத்தில் நேரடி வரி வசூல் 14.2 சதவீதம் உயர்ந்து 8.47 லட்சம் கோடியாகவும், மறைமுக வரி வசூல் அளவு 22 சதவீதம் அதிகரித்து 8.63 லட்சம் கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
இலக்கு
நேரடி வரி, மறைமுக வரி ஆகிய இரண்டிலும் மத்திய அரசு 2016-17 நிதியாண்டில் 100 இலக்கை அடைந்துள்ளது.
கார்பரேட் வரி வசூலில் 13.1 சதவீத உயர்வும், தனிநபர் வருமான வரி வசூலில் 18.4 சதவீத உயர்வும் எட்டியுள்ளது நிதியமைச்சகம்
ரீபண்ட் தொகை
அதேபோல் இந்த வருடம் கணக்காளர்களுக்குத் திரும்பி அளிக்கப்படும் தொகையில் அளவு 32.6 சதவீதம் அதிகரித்து 1.62 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் நிதியமைச்சகம் வரி வசூல் தொடர்பான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மறைமுக வரி
மறைமுக வரியின் கீழ் மத்திய கலால் வரி வசூலின் அளவு 33.9 சதவீதம் உயர்ந்து 3.83 லட்சம் கோடியாகவும், சேவை வரி 20.2 சதவீதம் உயர்ந்து 2.54 லட்சம் கோடியாகவும், சுங்க வரி 7.4 சதவீதம் உயர்ந்து 2.26 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications