20 பில்லியன் டாலர்கள் சம்பாதித்த இந்த இந்திய கோடீஸ்வர்கள் யாரெல்லாம் என்ற பட்டியலை இங்குப் பார்க்கலாம்.
இந்திய பில்லியனர்கள் 8 பேர் சேர்ந்து ஒரே ஆண்டில் 20 பில்லியன் டாலர் வரை சம்பாதித்து இருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா? ஆம் ஒரே ஆண்டில் 19.8 பில்லியன் டாலர் அதாவது 1.28 லட்சம் கோடி கண்ணைக் கட்டுகின்றது அல்லாவா.
சரி, வாங்க 20 பில்லியன் டாலர்கள் சம்பாதித்த இந்த இந்திய கோடீஸ்வர்கள் யாரெல்லாம் என்று ப்ளூம்பெர்க் வெளியிட்ட பட்டியலை இங்குப் பார்க்கலாம்.
முகேஷ் அம்பானி
2017-ம் நிதி ஆண்டில் மட்டும் முகேஷ் அம்பானி 6 பில்லியன் டாலர்களைத் தனது சொத்தாகச் சேர்த்துள்ளார். இதன் மூலம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 28.7 மில்லியன் டாகர்களாக அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதம் இலவசங்களுடன் துவங்கப்பட்ட ஜியோ நிறுவனத்தில் 2 லட்சம் கோடி ரூபாய் இவர் முதலீடு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
லக்ஷ்மி நிவாஸ் மிட்டல்
ஸ்டீல் நிறுவனங்களை நடத்தில் வரும் லக்ஷ்மி மிட்டல் இந்த ஆண்டு 1.5 பில்லியப் டாலர்களைச் சேர்த்ததுடன் தனது சொத்து மதிப்பை 15.9 பில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளார். இவருடைய வர்த்தகம் 2017-ம் நிதி ஆண்டில் 10.4 சதவீதம் வரை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திலிப் சாங்வி
சன் பார்மா நிறுவனத்தின் தலைவரான திலிப் சாங்வியின் சொத்து மதிப்பு 1.9 பில்லியன் டாலர்கள் இந்த ஆண்டு உயர்ந்து 14.7 பில்லியன் டார்களாக உள்ளது. 2017 நிதி ஆண்டில் இவரது சொத்து மதிப்பு 14.8 சதவீதம் உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு 687 ரூபாயாக இருந்த சன் பார்மா நிறுவனத்தின் பங்குகள் விலை இந்த ஆண்டு 854 ரூபாயாக அதிகரித்துள்ளது.
பல்லோஞ்சி மிஸ்ட்ரி
கட்டுமான துறையில் சிறந்து விளங்கு பல்லோஞ்சி மிஸ்ட்ரியின் வருமான இந்த ஆண்டு 6.3 சதவீதம் அதாவது 865 மில்லியன் உயர்ந்து சொத்து மதிப்பு 14.6 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
அசிம் பிரேம்ஜி
விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி 2017 நிதி ஆண்டில் 1.9 பில்லியன் சொத்து அதாவது 15.3 சதவீதம் தனது சொத்து மதிப்பை அதிகப்படுத்தி 14.1 பில்லியன் டாலர்களாக வைத்துள்ளார்.
ஷிவ் நாடார்
எச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு 9.3 சதவீதம் அதாவது 1.1 பில்லியன் அதிகரித்து 13.3 பில்லியன் டாலராக உள்ளது.
சைரஸ் பூனாவாலா
தடுப்பூசி நிறுவனத்தின் மூலம் பில்லியனர் ஆன சைரஸ் பூனாவாலாவின் சொத்து மதிப்பு 12.2 சதவீட்தம் உயர்ந்து 9 பில்லியன் டாலர்களாக உள்ளது.
உதய் கோடாக்
வங்கி நிறுவனரான உதய் கோடாக்கின் சொத்து மதிப்பு 2017-ம் நிதி ஆண்டுல் மட்டும் 25.7 சதவீதம் உயர்ந்து 8.9 பில்லியன் டாலர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
குமார் மங்கலம் பிர்லா
பிர்லா குழுமத்தின் தலைவரான குமார மங்கலம் பிர்லாவின் சொத்து மதிப்பு 2017-ம் நிதி ஆண்டில் மட்டும் 32.1 சதவீதம் உயர்ந்து 8 பில்லியன் டாலர்களாக உள்ளது.
கவுதம் அதானி
பிரதமர் மோடியின் ஆஸ்தான நண்பரான கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 2017-ம் நிதி ஆண்டில் மட்டும் 88 சதவீதம் உயர்ந்துள்ளது. இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 1.9 பில்லியன் டாலர்களாக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications