மீண்டும் ஏடிஎம்-களில் பணத் தட்டுப்பாடு..!

மீண்டும் ஏடிஎம்-களில் பணத் தட்டுப்பாடு..!

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் தடை செய்யப்பட்ட காலத்தில் வங்கிகள், ஏடிஎம்களில் அதிகளவிலான பணத் தட்டுப்பாடு இருந்தது நாம் அனைவருக்கும் அறிந்ததே. கடந்த சில மாதங்களாக மக்கள் மத்தியில் பல்வேறு வகையில் பணப் புழக்கம் அதிகரித்து இயல்பான நிலைக்குத் திரும்பியது.

ஆனால் கடந்த சில வாரங்களாக மீண்டும் ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் மக்கள் பணத்திற்காக அலைந்து வருகின்றனர்.

மீண்டும் ஏடிஎம்-களில் பணத் தட்டுப்பாடு..!

வங்கிகள் தரப்புக் கூறுகையில், முழுமையாக இயங்கி வரும் 60 சதவீத ஏடிஎம்களில் பணம் நிரப்பப்பட்டு வருகிறது எனக் கூறுகிறது.

ஆனால் ஒரு ஏடிஎம்-இல் பண நிரப்பப்படும் முழுமையான அளவான 30 லட்சம் ரூபாயில் வெறும் 10 லட்சம் ரூபாய் வரை மட்டுமே ஏடிஎம்களில் பணம் நிரப்புகிறது வங்கிகள் நிர்வாகம். இதன் மூலமாகவே அதிகளவிலான பணத் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்தியாவின் முன்னணி ஏடிஎம் தயாரிக்கும் நிறுவனம் கூறுகையில், இன்றைய நிலையில் இந்தியாவில் இருக்கும் மொத்த ஏடிஎம்களில் 70 சதவீதம் ஏடிஎம்களில் மட்டுமே பணம் வைக்கப்படுகிறது. 100 ரூபாய் நோட்டுகளின் தட்டுப்பாட்டுக் காரணமாக இந்த 70 சதவீத ஏடிஎம்களிலும் முழுமையான அளவில் பணம் வைக்கப்படுவதில்லை என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் நிதியாண்டின் இறுதி நாள் காரணமாகப் பல அதிகப்படியான ஏடிஎம் இயந்திரங்கள் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+