நெடுஞ்சாலைகளில் மது கடைகளுக்கு தடை: 10 லட்சம் பேருக்கு வேலை போச்சு, அரசுக்கு 2 லட்சம் கோடி இழப்பு..!

நெடுஞ்சாலைகளில் மது கடைகளுக்கு தடை: 10 லட்சம் பேருக்கு வேலை போச்சு, அரசுக்கு 2 லட்சம் கோடி இழப்பு..!

உச்ச நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியதை அடுத்துத் தமிழ்நாட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.

இது போன்று இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகள் ஏப்ரல் 1 முதல் முட்டப்பட்டதால் 10 லட்சம் நபர்கள் வேலையை இழந்துள்ளனர். அரசும் 2 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகள் மட்டும் இல்லாமல் மதுபானம் அளிக்கும் உணவகங்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து செயல்பட்டு வரும் ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மதுபானங்கள் வழங்கப்படுவதில்லை.

நெடுஞ்சாலை துறையின் தலைவர் திலிப் தத்வானி தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குத் தெரிவித்த தகவலின் படி 35,000 ரெஸ்டாரண்டுகள் மற்றும் பார்களில் இருந்து மூடப்படுகின்றது என்றார்.

மும்பை

மும்பை

மகாராஷ்டிராவில் மொத்தம் 13,655 பார்கள் மற்றும் மதுக் கடைகள் உள்ளன, அதில் 290 பார்கள் மும்பையில் மட்டும் உள்ளன, மும்பை சுற்றுவட்டார பகுதி என அனைத்தையும் சேர்த்தால் 2,000 பார்கள் உள்ளன. மகாராஷ்டிராவில் மீதம் உள்ள 9,925 பார்களுக்கு இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் அருகில் உணவகம், ரெஸ்டாரண்ட் மற்றும் பார்கள் திறக்க அதிகச் செலவாகும். இங்கு விற்பனைக்குத் தடை செய்யும் போது கோடிக் கணக்கில் நட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டும் இல்லாமல் பல பார்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகள் கடனில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

உசா நீதிமன்றத்தின் தீர்ப்பு

உசா நீதிமன்றத்தின் தீர்ப்பு

2016 டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் 500 மீட்டர் அருகில் எந்த ஒரு மது பானக்கடைகளும் இருக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது. மார்ச் 31-ம் தேதிக்கும் பிறகுபார்களுக்கான லைசன்ஸ்கள் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரம் ஏற்கனவே அனுமதி பெற்றுள்ள பார்களுக்குச் செப்டம்பர் 30-ம் தேதி வரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களின் வருவாய் மற்றும் வேலை வாய்ப்பு

மாநிலங்களின் வருவாய் மற்றும் வேலை வாய்ப்பு

இந்திய உணவுத் துறையின் மதிப்பு 408,000 கோடிகளாக உள்ளது, இப்போது ஏற்பட்டுள்ள தடையால் 200,000 கோடிகள் வரை வருமான இழப்பு ஏற்படும்.

மதுவில் இருந்து அரசுக்கு வரும் வருவாய்

மதுவில் இருந்து அரசுக்கு வரும் வருவாய்

அரசுக்கு மது மூலமாக 12,000 கோடி வருவாய்க் கிடைக்கின்றது, அதுவே இப்போது 6,000 கோடியாகக் குறைய வாய்ப்புள்ளது.

சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறை

சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறை

இப்போது 37.4 பில்லியன் வேலை வாய்ப்புகள் அளித்து வரும் சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறை மதுபானத்திற்கான தடையால் 5 சதவீதம் அதாவது 1 மில்லியன் வேலை வாய்ப்பு குறைய வாய்ப்புள்ளது.

குருகிராம் சைபர் ஹப்

குருகிராம் சைபர் ஹப்

ஹரியானாவில் உள்ள குருகிராம் சைபர் ஹப்பில் மட்டும் 34 பப்புகள் உள்ளன. இங்கு உள்ள ஹார்டு ராக் கேப் ரெசார்ட் அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசிய போது இங்கு 80 சதவீதம் வருமானம் மது பானங்களில் இருந்து தான் வருகின்றது என்கிறார். மீதம் தான் உணவு விற்பனை, மியூசிக் ஷோ மற்றும் பிற விற்பனையில் இருந்து என்று கூறப்படுகின்றது.

இங்கு வருபவர்களில் பலர் மது அருந்தவே என்று ஸ்ட்ரைக்கர் பப் மற்றும் பிரிவெரி பப்களின் நிர்வாகி கூறுகிறார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தடையால் ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறுகின்றது ஹரியான அரசு.

இப்போது ஹர்யானா அரசு ஆண்டுக்கு 5000 கோஇ வரை மதுபான விற்பனையின் வாயிலாக மட்டும் வருவாய் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

 

சென்னை

சென்னை

சென்னையில் மிகவும் பிரபலமான 10 டவுனிங் ஸ்ட்ரீட் பப் நிர்வாகி நாகேஷ் ரெட்டி எங்களுக்கு அரசு தரப்பிடம் இருந்து மூடச் சொல்லி எந்த அறிவிப்பும் வரவில்லை என்கிறார்.

10 டவுனிங் ஸ்ட்ரீட் பப் சென்னையின் முக்கியச் சாலையான மவுண்ட் ரோடில் உள்ளது. இது மாநில நெடுஞ்சாலைகளின் கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.

 

பெங்களூரு

பெங்களூரு

பெங்களூரில் உள்ள பல பப்கள் டெசம்பர் 15-ம் தேதி தான் அவர்களின் உரிமத்தைப் புதுப்பித்துள்ளன என்றும், அதனால் ஜூலை 1 வரை விற்பனை செய்யப்படும் என்றும் இந்திய தேசிய உணவு விடுதி சங்கத்தின் மேலாண்மைக் கமிட்டியின் உறுப்பினர் ஆஷிஷ் கொத்தாரே கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+