லாபம் வந்தாலும், நஷ்டம் வந்தாலும் எனக்கு ரூ.65 கோடி சம்பளம் வந்துடும்

லாபம் வந்தாலும், நஷ்டம் வந்தாலும் எனக்கு ரூ.65 கோடி சம்பளம் வந்துடும்

நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸின் சிஇஓ விஷால் சிக்காவிற்குக் கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் இரட்டிப்பு வளர்ச்சிக்காவும், சர்வதேச சந்தையில் இருக்கும் நிறுவனங்களுக்கு இணையாகச் சிக்காவிற்கு இன்போசிஸ் நிர்வாகம் 11 மில்லியன் டாலர் சம்பளம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சிக்காவின் நியமன ஆணையில், இவர் தலைமையில் இன்போசிஸ் லாபத்தை அடைந்தாலும், நஷ்டத்தை அடைந்தாலும் சிக்காவில் 90 சதவீத சம்பளம் கிடைக்கும் என்ற வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இன்போசிஸ்

இன்போசிஸ்

பிப்ரவரி 24ஆம் தேதி இன்போசிஸ் பிஎஸ்ஈக்கு சமர்பித்த அறிக்கையில், இன்போசிஸ் நிர்வாகம் நிர்யணம் செய்யும் 2016-17 நிதியாண்டுக்கான உள் இலக்குகளை விஷால் சிக்கா எட்டாவிட்டால் அவரது 11 மில்லியன் டாலர் சம்பளத்தில் 3 மில்லியன் டாலர் வரை குறைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.

11 மில்லியன் டாலர் சம்பளம்

11 மில்லியன் டாலர் சம்பளம்

விஷால் சிக்காவின் 11 மில்லியன் டாலர் சம்பளத்தில் 8 மில்லியன் டாலர் வேரியபில் பே, இது அவரின் செயல்திறன் அடிப்படையிலும் இலக்கை அடைவதன் மூலமும் இன்போசிஸ் நிர்வாகம் இந்த 8 மில்லியன் டாலரை அளிக்கும்.

ஆனால் இதுவரை நிர்வாகம் நிர்ணயம் செய்த உள் இலக்குகள் குறித்து எவ்விதமான தகவல்களையும் இன்போசிஸ் வெளியிடவில்லை. இதன் மூலம் விஷால் சிக்கா இலக்கை எட்டினாலும், எட்டாவிட்டாலும் குறைந்தபட்சம் 90 சதவீத சம்பளத்தைப் பெறுவார்.

 

அடுத்தச் செக்

அடுத்தச் செக்

மேலும் தனது 11 மில்லியன் டாலர் சம்பளத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவாக அளிக்கப்பட்டால் விஷால் சிக்கா 'Good Cause' என்று காரணத்தைக் கூறிவிட்டு எந்த நேரத்திலும் இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு வெளியேற முடியும் வகையில் தான் இன்போசிஸ் நிர்வாகம் இவரிடம் ஒப்பந்தம் செய்துள்ளது.

90 சதவீத சம்பளம்

90 சதவீத சம்பளம்

இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனம் எந்த நிலைக்குப் போனாலும் சிஇஓ-வான விஷால் சிக்காவிற்கு 90 சதவீத சம்பளம் அதாவது 10 மில்லியன் டாலர் சம்பளத்தை அளிக்க வேண்டும்.

இதைவிட ஒரு மனுஷனுக்கு என்ன வேண்டும் சொல்லுங்க.

 

30 நாள்

30 நாள்

ஒரு நிதியாண்டுக்கு 11 மில்லியன் டாலர் சம்பளத்தில் 8 மில்லியன் டாலர் வேரியபில் பே ஆகவும், மீதமுள்ள 3 மில்லியன் டாலரை நிலையான சம்பளமாகவும் விஷால் சிக்கா பெற்று வருகிறார்.

Good Cause காரணம்

Good Cause காரணம்

விஷால் சிக்காவின் சம்பள ஆணையில், Good Cause காரணத்தைக் காட்டி வெறும் 30 நாட்களில் வெளியேறாமல் இருக்க இன்போசிஸ் நிர்வாகம் எப்படியேனும் 90 சதவீத சம்பளத்தை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் மூழ்கியுள்ளது.

காரணம் சிக்கா வெளியேறினால், புதிய சிஇஓ-வை பணியில் அமர்த்துவதில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று ஏற்கனவே இன்போசிஸ் பார்த்துள்ளது.

 

அமெரிக்கா

அமெரிக்கா

விஷால் சிக்காவின் இந்தப் பணி நியமனம் மற்றும் அதில் உள்ள விதிகளுக்கு இந்திய பங்குச்சந்தை மட்டுமல்ல, அமெரிக்கப் பங்குச்சந்தையும் ஒப்புதல் அளித்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனம் அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விஷால் சிக்காவின் சம்பளம் குறித்த செய்திகளுக்கு இன்போசிஸ் நிறுவனம் எவ்விதமான எதிர்ப்பும், மறுப்பும் இதுவரை தெரிவிக்கவில்லை.

 

நாராயண மூர்த்தி

நாராயண மூர்த்தி

இந்நிறுவனத்தின் சிஓஓ பிரவீன் ராவ், நிறுவனத்தில் இருந்து வெளியேறிய ராஜீவ் பன்சால் ஆகியோரின் சம்பள உயர்விற்கு இன்போசிஸ் நிர்வாகத்திற்கு எதிராக நிற்கும் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் குழு, சிக்காவின் சம்பளம் குறித்து இதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+