ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 2017-18 நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டம்..!

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 2017-18 நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டம்..!

2017-18 நிதியாண்டின் முதல் நாணய கொள்கை மறுஆய்வு கூட்டம் புதன்கிழமை துவங்கிய நிலையில், 2 நாள் கூட்டம் இன்று முடிவடைந்தது.

நாட்டின் பணவீக்கம், அமெரிக்கா பெடரல் வங்கியின் வட்டி உயர்வு எதிரொலி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. இதன் மூலம் ரெப்போ விகிதம் அடுத்த 2 மாதங்களுக்கு 6.25 சதவீதமாகத் தொடரும்.

ரெப்போ விகிதம்

ரெப்போ விகிதம்

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் செய்யாத நிலையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இதன் வட்டி விகிதம் 6.25 சதவீதமாகத் தொடரும்.

மேலும் எம்எஸ்எப் விகிதம் 6.75 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் வங்கியின் கடன் பெற்றவர்களின் மாத தவணையில் மாற்றம் இருக்காது, மேலும் தற்போது கடனுக்கான வட்டி விகிதத்திலும் மாற்றம் இருக்காது.

 

ரிவர்ஸ் ரெப்போ விகிதம்

ரிவர்ஸ் ரெப்போ விகிதம்

ரெப்போ விகிதம் என்பது வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம். ரிவர்ஸ் ரெப்போ விகிதம் என்றால் ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளிடம் இருக்கும் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம்.

இன்றைய கூட்டத்தில் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை 5.75 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.

 

சிஆர்ஆர் விகிதம்

சிஆர்ஆர் விகிதம்

மேலும் இந்த நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தைப் போலவே சிஆர்ஆர் விகிதத்தையும் ரிசர்வ் வங்கி உயர்த்தவில்லை.

பணப்புழக்கம்

பணப்புழக்கம்

நாட்டின் பணப்புழக்கத்தைச் சீராக்கும் விதிதத்தில் நாணய கொள்கை மாற்றப்படும் எனவும், பணமதிப்பிழப்பு பின்பு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளால் பணப்புழக்கத்தின் அளவு மிகப்பெரிய அளவு அதிகரித்துள்ளது.

மேலும் பணப்புழக்கத்தை நாணய சந்தையின் மாற்றங்களைக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றார் போல் நாணய கொள்கையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் உர்ஜித் பட்டேல் கூறினார்.

 

வங்கிகள்

வங்கிகள்

வங்கிகளில் கொண்டு வரும் சீர்திருத்தங்கள் ஏப்ரல் 15 பின் துவங்கும் என்றும். வங்கிகளின் மூலதனம், சொத்துக்கள் ஆகியவற்றைப் பற்றிய முழுமையான ஆய்வுகள் செய்து அனைத்து வங்கிகளையும் லாபத்தை அளிக்கும் வகையில் மறுசீரமைப்புக் கொண்டு வர ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் பட்டேல் கூறினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+