ஊழியர்களை வெளியேற்ற இந்துஸ்தான் யூனிலீவர் திட்டம்.. 15% ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து..!
நாட்டின் முன்னணி நுகர்வோர் நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தனது தாய் நிறுவனமான யூனிலீவர், இக்குழுமம் வர்த்தகம் செய்யும் அனைத்துச் சந்தைகளிலும் செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
இதன் பெயரில் இந்தியாவில் இந்துஸ்தான் யூனிலீவர் கூட்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய இந்திய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
18,000 ஊழியர்கள்
2015-16 நிதியாண்டின் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன அறிக்கையில் படி இந்தியாவில் இருக்கும் இந்நிறுவனத்தின் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் சுமார் 18,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 1,500க்கும் மேற்பட்டவர்கள் மேனேஜர் அளவில் பணியாற்றி வருகின்றனர்.
10-15% பணிநீக்கம்
இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் மூலம் குறைந்தபட்சம் 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் அளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்படலாம் எனத் தெரிவித்தார்.
யூனிலீவர்
இத்தகைய நடவடிக்கை நிர்வாகத்தில் கடுமையாக இருந்தாலும், லாபகரமான வர்த்தகத்திற்கு ஏற்ற ஒரு அமைப்பை நாம் அமைத்தாக வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். மேலும் இது வர்த்தகத்தில் இது ஒரு பகுதி எனத் தாய் நிறுவனமான யூனிலீவர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கவனம் தேவை
இந்தப் பணிநீக்கம் முதல் யூனிலீவர் நிறுவன பல பரிவுகளில் இறங்காமல் நிலையான லாபம் அளிக்கும் துறைகளில் மட்டும் முழுமையான கவனத்தை அளிக்க வேண்டும்.
இல்லையெனில் போட்டி நிறுவனங்கள் முன் கண்டிப்பாக மிகப்பெரிய அளவிலான சரிவை சந்திக்கும் நிலை தற்போது யூனிலீவர் நிறுவனத்திற்கு உருவாகியுள்ளது.
5 அடுக்கு நிர்வாகம்
இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன 5 அடுக்கு நிர்வாக முறையைக் கடைப்பிடித்து வருகிறது, சீஇஓவில் துவங்கி துணை தலைவர், ஜெனரல் மேனேஜர், துணை மேனேர்ஜர்கள் கடைசியாக ஜூனியர் மேனேஜர்கள் என்ற அடிப்படையில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் இயங்கி வருகிறது.
7500 கோடி ரூபாய் சேமிப்பு
தற்போது யூனிலீவர் நிறுவனம் அறிவித்துள்ள 'கனெக்ட் 4 குரோத்' மூலம் இந்நிறுவனம் 2018ஆம் ஆண்டுக்குள் சுமார் 1 பில்லியன் யூரோவை சேமிக்க முடிவு செய்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பில் இதன் மதிப்பு 7,485 கோடி ரூபாய்.
போட்டி நிறுவனங்கள்
இந்தியாவில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்துடன் பி&ஜி, நெஸ்லே, கோல்கேட், ஜிஎஸ்கே, ரிக்கிட் பென்கைசர் ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறது.
மேலும் இந்நிறுவனங்களை விடவும் அதிகமாக இந்துஸ்தான் யூனிலீவர் வர்த்தகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மொத்த விற்பனை
இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் இந்திய சந்தையின் மொத்த விற்பனை அளவு 32,400 கோடி ரூபாய்.


Click it and Unblock the Notifications