ரூ.13,000 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்புந்தம்.. அதிநவீன ஏவுகணையை வாங்குகிறது இந்தியா..!

ரூ.13,000 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்புந்தம்.. அதிநவீன ஏவுகணையை வாங்குகிறது இந்தியா..!

இந்திய ராணுவம் மற்றும் கடற்படையின் பாதுகாப்பை அதிகரிக்க இந்திய அரசு இஸ்ரேல் நாட்டின் அரசு நிறுவனமான இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ் உடன் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணையை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

மேலும் இது இந்நிறுவனத்தில் மிகப்பெரிய டீல் என் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஏவுகணை

ஏவுகணை

இந்தியா இஸ்ரேல் நாடுகள் மத்தியிலான நடந்த இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசு வான் வழியில் தாக்க கூடிய அதிநவீன ஏவுகணைகள், மீடியம் தொலைவில் தாக்க கூடிய ஏவுகணைகளையும் வாங்க முடிவு செய்துள்ளது.

இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ்

இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ்

இதனைத் தாண்டி இந்த ஏவுகணைகளின் லாஞ்சர், தொலைத்தொடர்பு கருவிகள், அதனைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் ஆகியவற்றை அளிக்க உள்ளது இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ்.

இதன் மதிப்பு 1.6 பில்லியன் டாலர்.

 

புதிய விமானம்

புதிய விமானம்

இதனுடநன் இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் போக்குவரத்து விமானத்தை மேலும் சக்திவாய்ந்த ஒன்றாக மாற்ற முடிவு செய்துள்ள இந்திய அரசு. இதில் தொலை தூரத்தில் தாக்க கூடிய ஒரு ஏவுகணையையும் இஸ்ரேல் உடன் வாங்க முடிவு செய்துள்ளது.

ஆக, இந்த ஒப்பந்தத்தின் முழுமையான மதிப்பு 2 பில்லியன் டாலர்.

 

முக்கிய வாடிக்கையாளர்

முக்கிய வாடிக்கையாளர்

இந்தியாவிற்கு ஆயுதங்களை அளிக்கும் முக்கிய 3 வாடிக்கையாளர்களில் இஸ்ரேல் நாடும் ஒன்று. 

இனி வரும் காலங்களில் இந்தியா தனது ஆயுத கொள்முதலை குறைத்துக்கொண்டு உள்நாட்டிலேயே அதிகளவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2வது இடத்தில் இந்தியா

2வது இடத்தில் இந்தியா

அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வின் படி 2008-2015ஆம் ஆண்டுகளில் உலகளவில் அதிக ஆயுதங்களைக் கொள்முதல் செய்த நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

கேள்விக்குறி

கேள்விக்குறி

கடந்த சில மாதங்களாகப் பல்வேறு அரசியல் காரணங்களால் இந்தியா இஸ்ரேல் நாடுகள் மத்தியில் இருக்கும் நட்புறவு கேள்விக்குறியாகி இருந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசின் சிறப்பான நடவடிக்கையில் இரு நாடுகள் மத்தியில் இருக்கும் நட்புறவில் எவ்விதமான தொய்வு ஏற்படவில்லை.

இதற்குச் சான்றாகவே இந்த 2 பில்லியன் டாலர் அதாவது 1300 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தம்.

 

அட இத கேட்டிங்களா..?

அட இத கேட்டிங்களா..?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+