டிராயின் மூன்று மாத சாமர் சர்பிரைஸ் ஆஃபரை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளதாக ஜியோ நிறுவனமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் தொலைத்தொடர்பு ஆணையமான டிராய் ஜியோவின் மூன்று மாத இலவச சேவைக்கான சம்மர் சர்பிர்ரைஸ் திட்டத்தைத் தொடரா கூடாதாது என்று அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான முடிவு வியாழக்கிழமை ஜியோ நிறுவனத்தின் அதிகாரிகளுடனான டிராயின் சந்திப்பிற்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால் போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.
ஜியோ அறிக்கை
டிராயின் மூன்று மாத சாமர் சர்பிரைஸ் ஆஃபரை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளதாக ஜியோ நிறுவனமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அது மட்டும் இல்லாமல் அறிக்கையில் டிராயின் ஆலோசனையை ஏற்று இந்த மூன்று மாத சலுகை திட்டத்தை வாப்பஸ் பெறுவதாக மேகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட ஆஃபர்
சம்மர் சர்பிரைஸ் ஆஃபர் அறிவித்ததில் இருந்து ஜியோ மனி செயலியில் இருந்த வந்த மூன்று மாத சலுகைகளுக்கான ஆஃபர்கள் திருத்தப்பட்டு 28 நாட்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
50 ரூபாய் கேஷ் பேக் ஆஃபர் உண்டு
ஆனால் பிரைம் ரீசார்ஜ் மற்றும் 303, 499 ரூபாய் போன்று ரீசார்ஜ் செய்யும் போது 50 ரூபாய் சலுகை பெறலாம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
இதனால் 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்த பிறகு 50 ரூபாய் ஜியோ மனியில் திருப்பி அளிக்கப்படும். அதனைப் பயன்படுத்தி அடுத்த ரீசார்ஜின் போது 50 ரூபாய் சலுகை கிடைக்கும்.
புதிய காம்போ திட்டம்
99 ரூபாய் பிரைம் ரீசார்ஜ் செய்யாதவர்களுக்கு 402 மற்றும் 598 ரூபாய்க்குக் காம்போ ஆஃப்ர்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூலமாக ரீசார்ஜ் செய்யும் போது 50 ரூபாய் கேஷ் பாக் ஆஃப்ர் கிடைக்கும்.
பிரைம் ரீசார்ஜ்
99 ரூபாய் பிரைம் ரீசார்ஜ் செய்வதற்கான காலக்கெடுவில் எந்த மாற்றமும் இல்லை. அதனால் ஏப்ரல் 15 வரை பிரைம் ரீசார்ஜ் செய்ய முடியும்.
திருப்பப் பெறுவதற்கான அறிவிப்பு
நேற்று இரவு சம்மர் சர்பிரைஸ் திட்டத்தைத் திரும்பப் பெறுவதை அறிவித்த ஜியோ 24 முதல் 48 மணி நேரத்தில் இந்தத் திட்டம் கைவிடப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் 12 மணி நேரத்தில் இந்தத் திட்டத்தை முழுமையாகத் திரும்பப்பெற்றுள்ளது.
முதலில் அறிவித்திப்படி பழைய திட்டம் தொடரும்
மூன்று மாத சலுகை திட்டத்தை ஏற்கனவே ரீசார்ஜ் செய்தவர்களுக்கும் இலவசம் இல்லை என்பதை ஜியோவின் அறிக்கை உறுதி செய்துள்ளது.
அதனால் இனி 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்குத் தினமும் 1 ஜிபி கிடைக்கும். குரல் அழைப்புகள் எப்போதும் போல இலவசமாகக் கிடைக்கும்.
இதுவே 499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்குத் தினமும் 2 ஜிப் தரவுடன் கிடைக்கும். இந்தத் திட்டத்திற்கும் குரல் அழைப்புகள் எப்போதும் போல இலவசமாகக் கிடைக்கும். அதுமட்டும் இல்லாமல் பிற ரீசார்ஜ் திட்டங்களும் எப்போதும் போலச் செயல்படும்.
செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் கருத்து
இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் தலைவர் மேத்தியூவ்ஸ் டிரயின் இந்த முடிவினால் தொலைத்தொடர்பு துறைக்கு இது ஒரு நல்ல செய்தி என்றும் ஆனால் சந்தாதார்களுக்கு இது கசப்பான செய்தி என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications