ஜெட் ஏர்வேஸ் வழங்கும் ‘சம்மர் பிரேக்ஸ்’ ஆஃபர்: 1,294 ரூபாயில் விமானப் பயணம்..!
உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் விமானச் சேவையை அளித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 1,294 ரூபாய்க்கு உள்நாட்டு விமானப் பயணங்களுக்கான டிக்கெட் விலையைக் குறைத்து 'சம்மர் பிரேக்ஸ்' என்ற பெயரில் அறிவித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்தச் சம்மர் பிரேக்ஸ் ஆஃபரில் 20 பயணத் தேதிக்கு 20 நாட்களுக்கு முன்பு புக் செய்யும் டிக்கெட்களுக்கு ஆஃபர் பெறலாம்.
பிரீமியர் வகுப்பு வசதி
ஜேட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்த அதிரடி சலுகையில் டிக்கெட் புக் செய்பவர்களுக்குப் பிரீமியர் வகுப்புக்கு அப்கிரேடு செய்யும் வசதியும் அளிக்கப்படும்.
டிவிட்
உங்களது சம்மர் கோடை விடுமுறை துவங்கிவிட்டது, கூலான விலையில் பிரீமியர் வகுப்பு அப்கிரேடு வசதியுடன் பெற்று மகிழுங்கள் என்று ஜெட் ஏர்வேஸ் பயணிகளுக்கு டிவிட் மூலம் இந்த ஆஃபரை அறிவித்துள்ளது.
சலுகை காலம்
இந்தச் சலுகை விலையில் ஏப்ரல் 7 முதல் 9-ம் தேதி வரை டிக்கெட்களை விற்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதே நேரம் எவ்வளவு டிக்கெட்கள் இந்த ஆஃபர் விலையில் கிடைக்கும் என்று ஜேட் ஏர்வேஸ் கூறவில்லை.
வழித்தடங்கள்
மும்பை-அகமதாபாத், புனே-அகமதாபாத், லக்னோ-தில்லி மற்றும் கோவா-பெங்களூரு வழித்தடங்களில் மேலும் பல சலுகைகளை ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
இந்தியாவில் விமானப் போக்குவரத்து
விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அதிரடியாகப் பல ஆஃபர்களை அறிவித்து வரும் நிலையில் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் வளர்ச்சி 16 சதவீதம் அதிகரித்துள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம் தான் அதிகபட்சமாக 34.19 லட்சம் பயணிகளுக்குப் பிப்ரவரி மாதம் விமானச் சேவை அளித்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications