அனைவருக்கும் வீடு: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்து தனியார் நிறுவனங்களுடன் அரசு ஆலோசனை!
பிரதமர் அலுவலகம் 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. இத் திட்டத்தை மேலும் விரிவு படுத்துவதற்காகத் தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் இன்று ஆலோசனை நடத்தப்படுகின்றது.
இதற்காகப் பிரதமர் அலுவலகம் சிஆர்இடிஎஐ மற்றும் என்ஆர்இடிசிஓ ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைவருக்கும் குறைந்த விலையில் கட்டித் தருவதில் உள்ள சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
குறைந்த விலை வீடு கட்டுவதை எப்படிப் பிரபலப்படுத்துவது
பிராதன் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் எப்படிக் குறைந்த விலை வீடு திட்டத்தைப் பிரபலப்படுத்துவது என்றும் குறைந்த விலையில் வீடுகளைக் கட்டி எப்படி விற்பது என்றும் சிஆர்இடிஎஐ விளக்கக் காட்சி ஒன்ற மத்திய அரசுக்கு அளிக்க இருக்கின்றது.
வெங்கையா நாயுடு கருத்து
இரண்டு மாதங்களுக்கு முன்பு நகர்ப்புற உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு இது வரை ஒரு தனியார் நிறுவனங்களிடம் இருந்து கூடக் குறைந்த செலவில் வீடு காட்டி தருவதற்கான திட்டம் அறிவிப்பு அரசுக்கு வரவில்லை என்றும் இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்து இருந்தார்.
பட்ஜெட்
ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசும் இந்த ஆண்டுப் பட்ஜெட்டில் குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டத்தில் நிறைய மாற்றங்கள் செய்து அறிவிப்பை வெளியிட்டது.
மோடி அறிவிப்பு
டிசம்பர் 31-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிரதான மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு 4 சதவீதம் வரை வட்டி குறைப்பு மட்டுமில்லாமல் இன்னும் பிற சலுகைகளையும் அறிவித்தார்.
வட்டி விகிதம் குறைப்பு
அதுமட்டுல் இல்லாமல் நகர்ப்புறங்களில் வாழும் மக்களுக்காக 9 லட்சம் ரூபாய், 12 லட்சம் ரூபாய் தொகை வீட்டுக் கடனுக்கு 4 சதவீதம் மற்றும் 3 சதவீதம் என வட்டி விகிதத்தையும் அறிவித்தார். இதுவே கிராம புரங்களில் 2 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனுக்கு 3 சதவீதம் வட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
ஏழை மற்றும் நடுத்தர வற்க மக்களுக்கான திட்டம்
சுதந்திரம் பெற்று பல வருடங்கள் ஆன நிலையில் இன்னும் பலர் ஏழ்மையாகவும், தங்க வீடு இல்லாமல் தெருவோரங்களிலும், சத்திரங்களிலும் வசித்து வருகின்றனர். கருப்புப் பணம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றால் நடுத்தர மக்கள் கூட வீடு கட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
இதனால் தான் பிராதன் மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர வற்க மக்களுக்கு வீடு கட்டுவதற்குக் கடன் அளிக்கும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications