ஒரு வருடத்தில் உண்டியலில் மட்டும் ரூ. 1,038 கொடி திருப்பதி ஏழுமலையானின் அசத்தல் வசூல் அறிக்கை..!
இந்தியாவின் பணக்கார கோயில் என்றால் அது திருப்பதி வெங்கடேஷ்வர பெருமாள் கோவில் தான் என்று கண் மூடிக் கொண்டு கூறலாம். ஆண்டுதோறும் இங்குச் செல்பவர்களின் மக்கல் கூட்டம் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றது.
இப்படிச் சென்ற நிதி ஆண்டில் மட்டும் திருப்பதி கோயிலுக்குக் கிடைத்த வருவாய் எவ்வளவு தெரியுமா 1,038 கோடி. அப்படியானால் திருப்பதியைச் சுற்றி நடக்கும் வியாபாரங்களை வைத்து ஆந்திராவுக்கு எவ்வளவு வருமானம் வரும் நினைத்துப் பாருங்கள்.
மொத்தமாகத் திருப்பதிக்கு வந்து சென்ற பக்தர்கள் எண்ணிக்கை
திருமலை திருப்பதி கோயில் அதிகாரி டி ஷாம்பசிவா ராவ் இது பற்றி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் 2016-2017 நிதி ஆண்டில் 2.6 கோடி பக்தர்கள் கோவிலுக்கு வந்து சென்றுள்ளதாகக் கூறுகின்றார்.
பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளின் எண்ணிக்கை
திருமலை திருப்பதி செல்லும் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு சென்ற நிதி ஆண்டில் மட்டும் 10.46 கோடி விற்பனையாகியுள்ளதாகக் கூறினார்.
நடப்பு நிதி ஆண்டிற்கான பட்ஜெட்
திருமலை திருப்பதி கோவில் நிர்வாகம் 2017-2018ம் நிதி ஆண்டிற்கு மட்டும் 2,858 கோடி ரூபாய் பட்ஜெட்டாக ஒதுக்கியுள்ளது.
உண்டியல் மட்டும் இல்லை முதலீடுகளில் இருந்தும் வருமானம்
கோவில் உண்டியலில் விழுந்த காணிக்கையின் தொகை மட்டும் 1,110 கோடி ஆகும். அது மட்டும் இல்லாமல் இந்த 1,110 கோடியை வங்கி கணக்கில் வைத்தது மற்றும் முதலீடு செய்ததின் வட்டி என மொத்தம் 807.7 கோடிகள் வருவாய் கூடுதாலகக் கிடைத்துள்ளது.
மொட்டை அடிப்பதில் இருந்து பெற்ற வருமானம்
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் மொட்டைப் போடுவதற்குச் செலுத்தும் கட்டணத்தின் மூலம் 100 கோடி ரூபாய் வருமான பெற்று இருக்கும் என்று கூறப்படுகின்றது.
சிறப்பு நுழைவு கட்டணம்
வேகமாகப் பெருமாளை தரிசிக்க உதவும் சிறப்பு நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும் 300 ரூபாயில் இருந்து மட்டும் 256 கோடியும், லட்டு விற்பனையில் இருந்து 165 கோடியும் வருமானமாகக் கிடைத்திருக்கும் என்று கூறப்படுகின்றது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications