இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அடுத்தச் சில மாதங்களில் ஏர்செல், எம்டிஎஸ் நிறுவனங்களை முழுமையாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட உள்ள நிலையில் ஊழியர்கள் பணிநீக்கம் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
ரூ.50 லட்சம் சம்பளம்
இந்நிறுவனத்தில் வருடம் 30-50 லட்சம் ரூபாய் வரையில் சம்பளம் வாங்கும் நடு மற்றும் உயர் மேலாளர்களும் இந்தப் பணிநீக்கத்தில் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த ஊழியர்கள்
இந்தப் பணிநீக்கத்தின் மூலம் ஏர்செல், எம்டிஎஸ் நிறுவன இணைப்பிற்குப் பின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சுமார் 7,500 ஊழியர்களைக் கொண்டு இந்திய சந்தையில் சக்திவாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக மாற உள்ளது.
டெலிகாம் துறை
4.85 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்கள் தற்போது முன்னணி மற்றும் போட்டி நிறுவனங்களுடன் இணையும் நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் மட்டும் அல்லாமல் ஏர்டெல், ஐடியா, வோடபோன் ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் ஊழியர்கள் பணிநீக்கத்தைச் செலவின குறைப்பு நடவடிக்கையின் வாயிலாக இருக்கும்.
எரிக்சன்
மேலும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் எரிக்சன் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய 800 கோடி ரூபாய் நிலுவை தொகை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்நிறுவனத்திற்குத் தற்போது நிதி நெருக்கடியில் உள்ளது.
25,000 பேரின் வேலைக்கு ஆபத்து..


Click it and Unblock the Notifications