ஓரே கல்லில் 3 மாங்காய்.. பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு அடித்தது ஜாக்பாட்..!
பெங்களுரூ: நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் அமேசான் உடன் போட்டி போட முடியாமல், மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்து வந்தது.
இந்நிலையில் இன்று டென்சென்ட், ஈபே, மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சுமார் 1.4 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைப் பெற்றுள்ளது மட்டுமல்லாமல் ஈபே இந்தியா நிறுவனத்தையும் கைப்பெற்ற ஒப்பந்தம் செய்துள்ளது.
மதிப்பு உயர்ந்தது
பிளிப்கார்ட் நிறுவனத்தின் செயல்பாடுகள், அதன் வர்த்தக அளவுகள் மூலம் இந்நிறுவனத்தின் மதிப்பு தாறுமாறாகக் குறைந்த நிலையில், இந்த 3 முக்கியத் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீட்டு மூலம் தற்போது இந்நிறுவனத்தின் மதிப்பு 11.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ஆஸ்தான முதலீட்டாளர்கள்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆஸ்தான முதலீட்டாளர்களாக இதுவரை டைகர் குளோபல், நேஸ்பர் குரூப், ஏசல் பார்ட்னர்ஸ், டிஎஸ்டி குளோபல் ஆகியவை இருக்கிறது.
சச்சின் மற்றும் பின்னி பன்சால்
நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை அளிக்கத் தொழில்நுட்ப உதவிகள் இந்த 3 நிறுவனங்களிடம் இருந்து சிறப்பான முறையில் கிடைக்கும் என்பதை உணர்ந்து இந்த முதலீட்டை பெற்றுள்ளோம் எனப் பிளிப்கார்ட் நிறுவனர்களான சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகியோர் தெரிவித்தனர்.
டென்சென்ட்
சீனாவில் மிகப்பெரிய இண்டர்நெட் சேவை அளிக்கும் நிறுவனமாகத் திகழும் டென்சென்ட், பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்து இந்திய சந்தையில் களமிறங்கியுள்ளது.
மேலும் இந்நிறுவனம் இந்திய சந்தையில் ஜப்பான் சாப்ட்பாங்க் நிறுவனத்திற்கு எதிராக இந்திய வர்த்தகச் சந்தையில் இறங்கியுள்ளது.
மைக்ரோசாப்ட்
பிளிப்கார்ட் நிறுவனம் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் வேளையில், அமேசான் உடன் போட்டி போட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீடும் கிளவுட் சேவையும் மிகப்பெரிய அளவில் உதவும்.
ஈபே
இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் பிளிப்கார்ட் நிறுவனம் வர்த்தக அளவுகளில் முதல் இடத்தில் இருந்தாலும் அதிகளவில் நஷ்டத்தில் உள்ளது. இதன் காரணமாகத் தனது வர்த்தகத்தை அதிகரிக்க ஈபே உடன் இணையத் திட்டமிட்டுள்ளது.
உலகளவில் இணைய வர்த்தகத்தில் ஈட்டுப்பட்டுள்ள ஈபே.காம் தனது இந்தியா வர்த்தகப் பிரிவான ஈபே.இன் நிறுவனத்தைப் பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைக்க இரு நிறுவனங்களுக்கும் முடிவு செய்துள்ளது.
முதலீடு
மேலும் நிறுவனத்தின் இணைப்பு மட்டும் அல்லாமல் பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடும் செய்துள்ள ஈபே.காம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications