4 நாட்களில் 2.45 பில்லியன் டாலர்.. இந்திய சந்தை மீது அன்னிய முதலீட்டாளர்கள் தீவிரம்..!

4 நாட்களில் 2.45 பில்லியன் டாலர்.. இந்திய சந்தை மீது அன்னிய முதலீட்டாளர்கள் தீவிரம்..!

இந்தியாவில் அமலாக்கம் செய்யப்பட உள்ள ஜிஎஸ்டி மற்றும் உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும் மத்திய திட்டங்கள் அன்னிய முதலீட்டாளர்களை முன்னிலையில் இந்திய சந்தை அதிகளவில் கவர்ந்துள்ளது.

இதன் காரணமாகக் கடந்த 4 வர்த்தகத் தினத்தில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் மூலதன சந்தையில் சுமார் 2.54 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளனர்.

பிஜேபி வெற்றி

பிஜேபி வெற்றி

5 மாநில தேர்தலில் பிஜேபி வெற்றியின் காரணமாக மார்ச் மாத்தில் இந்திய சந்தையில் மட்டும் சுமார் 56.944 கோடி ரூபாய் அதாவது 8.7 பில்லியன் அமெரிக்க டாலரை இந்திய சந்தை முதலீடாகப் பெற்ற நிலையில், இந்த மாதமும் அதிகளவிலான முதலீடு குவிந்து வருகிறது.

முக்கியக் காரணம்

முக்கியக் காரணம்

மேலும் இந்தியாவில் தொடர்ந்து உற்பத்தி அதிகரித்து வருவது அன்னிய முதலீட்டுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் ஜிஎஸ்டி குறித்த 4 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது அன்னிய முதலீடு குவிய முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

இன்றைய வர்த்தகம்

இன்றைய வர்த்தகம்

அன்னிய முதலீட்டாளர்கள் மத்தியில் சிரியா தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா, ரஷ்யா மத்தியில் லாபம் அளிக்கும் சந்தை எது என்பதைக் கணிக்க முடியாத நிலையில் இன்றைய வர்த்தகத்தில் அன்னிய முதலீடு மட்டும் அல்லாமல் உள்நாட்டுச் சந்தை முதலீடும் அதிகளவில் குறைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

இதன் மூலம் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 130.87 புள்ளிகள் சரிந்து 29,575.74 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் தொடர் சரிவைச் சந்தித்த நிலையில், இன்று வர்த்தக முடிவில் 16.85 புள்ளிகள் சரிந்து 9,181.45 புள்ளிகளை அடைந்தது.

 

டாப் 30 நிறுவனங்கள்

டாப் 30 நிறுவனங்கள்

மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று இன்போசிஸ், விப்ரோ, ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ், எச்டிஎப்சி, டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.

அதேபோல் டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், லூபின் ஆகிய நிறுவனங்கள் உயர்வைச் சந்தித்தது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+