3 வருட சாதனை: வரி ஏய்ப்புச் செய்யப்பட்ட ரூ.1.37 லட்சம் கோடி கண்டுபிடிப்பு.. 3,893 பேர் கைது..!
கடந்த 3 வருடத்தில் இந்தியாவில் சுமார் 1.37 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளதை நிதியமைச்சகம் கண்டுபிடித்துள்ளது
இந்தியாவில் வரி ஏய்ப்பு, கருப்புப் பணம் பறிமுதல் ஆகியவற்றை வருவாய் துறை மிகப்பெரிய அளவில் உறுதியான சட்டதிட்டங்களைக் கொண்டு அடக்கியுள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரூ.1.37 லட்சம் கோடி
மேலும் இக்காலகட்டத்தில் வருமான வரி துறையினர் சுமார் 23,064 சோதனைகளைச் செய்துள்ளனர். இதன் மூலம் சுமார் 1.37 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
23,000 சோதனைகள்
இதில் வருமான வரித்துறை 17,525 சோதனைகளும், சுங்கத்துறை 2,509 சோதனைகளும், மத்திய கலால் வரித் துறை 1,913 சோதனைகளும், சேவை வரித் துறை 1,120 சோதனைகளைச் செய்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரி ஏய்ப்பு
இதன் பிடி மொத்த 1.37 லட்சம் கோடி ரூபாயில் வரி ஏய்ப்புத் தொகையில் வருமான வரித் துகை 69,434 கோடி ரூபாயும், சுங்கத்துறை 11,405 கோடி ரூபாயும், கலால் வரித் துறை 13,952 கோடி ரூபாயும், சேவை வரித் துறை 42,727 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கைப்பற்றியுள்ளது.
வழக்குகள்
இந்த 3 வருடத்தில் வரி ஏய்ப்பில் ஈடிப்பட்டதாக 2,814 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 3,893 பேர் பெயரில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை
பணச் சலவை தடுப்பு பிரிவின் கீழ் அமலாக்கத் துறை இக்காலகட்டத்தில் 519 வழக்குகளைப் பதிவு செய்து, 396 சோதனைகளை நடத்தியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் 79 வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்யப்பட்டு 14,933 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்துள்ளது அமலாக்கத் துறை.
பினாமி சட்டம்
நவம்பர் 2016இல் இந்தியாவில் அமலாக்கம் செய்யப்பட்ட பினாமி பரிமாற்ற மசோதாவில், 245 முறையற்ற பரிமாற்றங்கள் செய்யப்பட்டதைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் 124 வழக்குகள் தொடர்புடைய 55 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் இந்த 3 வருட சாதனையைப் பட்டியல்போட்டுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications