ஒரு வழியாக 'கிங்பிஷர் வில்லா' கதை முடிந்தது..!!
விஜய் மல்லையா கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் பெயரில் வாங்கிய கடனை திருப்பி அளிக்க முடியாமல் லண்டனுக்குச் சென்று ஒழிந்துகொண்டு இருக்கும் நிலையில், மல்லையாவிற்குக் கடன் கொடுத்த 17 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் கோவாவில் உள்ள கிங்பிஷர் வில்லாவை கையகப்படுத்தியது.
17 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்குத் தலைமையாகச் செயல்படும் எஸ்பிஐ வங்கி, இந்த ஆடம்பர பங்களாவை கைப்பற்றிப் பல மாதங்கள் ஆன நிலையில், இதனைச் சரியான விலை கொடுத்து வாங்க யாரும் முன்வரவில்லை என்பதால் இதுநாள் வரை வங்கி கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது.
தற்போது இந்த வில்லா-வை, சச்சின் ஜோஷி என்பவருக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. யார்யா இவரு..??
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
கிங் ஆஃப் குட் டைம்ஸ் என்ற வழக்கு இன்றளவிலும் கிங்பிஷர் நிறுவனத்திற்கு இருந்தாலும், அதன் தலைவர் விஜய் மல்லையாவிற்கு இல்லை.
எஸ்பிஐ வங்கி கட்டுப்பாட்டில் இருந்த கிங்பிஷர் வில்லா வெளியிடப்படாத விலைக்கு எஸ்பிஐ வங்கி நிர்வாகம் சச்சின் ஜோஷி என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் நேற்று வெளியிட்டது.
இதன் விற்பனை குறித்து எஸ்பிஐ வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா உறுதி செய்துள்ளார்.
ஆர்வம்
2016ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதத்தில் கிங்பிஷர் வில்லாவை ஹாஸ்பிடாலிட்டி மற்றும் மீடியா துறையில் இருக்கும் 6 நிறுவனங்களுக்கு அதிகமானோர் இதை வாங்க முன்வந்த நிலையில் எஸ்பிஐ நிர்வாகத்தின் 85 கோடி ரூபாய் விலை நிர்ணயத்தைக் கண்டு தெறித்து ஓடினார்கள்.
எஸ்பிஐ வங்கி நிர்வாகம் இதனை விற்பனை செய்தாக வேண்டிய சூழ்நிலையில் இதன் விலை படிப்படியாகக் குறைத்தது. இதன்படி டிசம்பர் மாதம் 81 கோடி ரூபாயாகக் குறைத்தது.
73 கோடி ரூபாய்
எஸ்பிஐ வங்கி பல மாதங்களாக விற்பனை செய்ய முடியாமல் வைத்திருந்த கிங்பிஷர் வில்லாவை, அதன் கடைசி நிர்ணய விலையான 73 கோடி ரூபாய்க்கு சச்சின் ஜோஷி இந்த ஆடம்பர வில்லாவை வாங்கியிருக்கக் கூடும்.
இதன் விற்பனை குறித்து உறுதி செய்த எஸ்பிஐ வங்கி நிர்வாகம், அதன் விளை குறித்து எவ்விதமான தகவல்களையும் அறிவிக்கவில்லை. கோவா கண்டோலிம் கடற்கரை அருகில் இருக்கிறது இந்த வில்லா.
சச்சின் ஜோஷி
விஜய் மல்லையாவை போல் இவரும் ஒரு பீர் நிறுவனத்தின் உரிமையாளர் தான், சச்சின் ஜோஷி தலைமையிலான வைகிங் வென்சர்ஸ் நிறுவனம் 90 கோடி ரூபாய்க்கு இம்பாலா டிஸ்டில்லெரி அண்ட் ப்ரூவெரி நிறுவனத்தின் கிங்ஸ் பீர் பிராண்டை வாங்கியது.
தற்போது இது ஏற்றுமதிக்காகக் கோவா கிங்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டுத் தற்போது மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது இந்தப் பீர் நிறுவனம்.
கிங்பிஷர் வில்லா
நடிகர், பிஸ்னஸ்மேன் என்ற பல முகங்களைக் கொண்ட சச்சின் ஜோஷி கோவாவின் அடையாளங்களில் ஒன்றான கிங்பிஷர் வில்லா-வை கைப்பற்றி உள்ள நிலையில், இவர் ஏற்கனவே உட்ரோடா பகுதியில் 115 அறைகள் கொண்ட ஒரு ரெசார்ட்-இல் 250 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
மேலும் தென்கிழக்கு ஆசிய பகுதிக்கான பிளானெட் ஹாலிவுட் பிராண்ட் உரிமையும் இவர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திரைப்படம்
ஜேஎம்ஜே குரூப் ஆஃப் கம்பனிஸ் குழுமத்தின் துணை தலைவராக இருக்கும் இவர் உடற்பயிற்சி முதல் விளையாட்டு முதல் பல துறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதுமட்டும் அல்லாமல் வைகிங் மீடியா மற்றும் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார். சச்சின் ஜோஷி ஆசான், மும்பை மிரர் மற்றும் ஜாக்பாட் போன்ற ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் மல்லையா
2016ஆம் ஆண்டு விஜய் மல்லையாவின் 60வது பிறந்த நாளின் பிரம்மாண்ட கொண்டாட்டங்கள் முடிந்த இரண்டே மாத்ததில் 17 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் எஸ்பிஐ தலைமையிலான குழு இந்த வில்லாவை கைப்பற்றியது.
வில்லா..
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications