ஸ்பைஸ்ஜெட் பங்குகள் திடீர் உயர்வு.. செபி உடன் அஜய் சிங் செட்டில்மென்ட்..!
மும்பை: நாட்டின் முன்னணி மலிவு விலை பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனப் பங்குகளின் விலை இன்று காலை வர்த்தகத் துவக்கத்தில் 2.9 சதவீதம் உயர்வுடன் துவங்கியது.
இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். இத்தகைய உயர்விற்கு என்ன காரணம்..?
செபி
மூலதன சந்தை கட்டுப்பாடு ஆணையமான செபி, ஸ்பைஸ்ஜெட் நிறுவன தலைவர் அஜய் சிங் மீது தொடுத்த வழக்கை விலக்கிக்கொண்டது.
இதன் அடிப்படையில் முதலீட்டாளர்கள் மத்தியில் ஸ்பைஸ்ஜெட் முக்கிய முதலீடு வாய்ப்பாக உருவானது.
என்ன வழக்கு
பிப்ரவரி 2015ஆம் ஆண்டு நிறுவன முதலீட்டாளர்களிடம் இருந்து அஜய் சிங் வாங்கிப் பங்குகள் சட்ட விதிமீறல்கள் செய்யப்பட்டுள்ளதாகச் செபி குற்றம்சாட்டி இவர் மீது வழக்குத் தொடுத்தது.
இதனிடையில் அஜய் சிங், செபி குற்றச்சாட்டுக்கு மறுப்பும் தெரிவிக்காமல், ஒப்புக்கொள்ளவும் இல்லாமல், இந்த வழக்கைத் தீர்க்க முன்வந்த நிலையில், செபி வழக்கைத் திரும்பப் பெற்றது.
அபராதம்
மேலும் பங்கு பரிமாற்றம் செய்யப்பட்டதில் விதிமீறல்கள் செய்யக் காரணத்திற்காகச் செபி, அஜய் சிங் அவர்களுக்கு 2.02 லட்சம் ரூபாயை அபராதமாக விதித்தது.
பங்குகளின் விலை உயர்வு
செபி வழக்கைத் திரும்பப்பெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனப் பங்குகளின் விலை 2.9 சதவீதம் வரை உயர்வுடன் துவங்கியது.
இதன் பின் 12.00 மணியளவில் இதன் மதிப்பு 1.24 சதவீத அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 12.35 மணியளவில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனப் பங்குகள் மதிப்பு 98.15 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
பிப்ரவரி 2015
2015ஆம் ஆண்டு ஸ்பைஸ்ஜெட் மிகப்பெரிய நிதிநெருக்கடியில் சிக்கியிருந்தது.
இதனால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் உரிமை அனைத்தும் இதன் உரிமையாளராக இருந்த சன் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறனிடமிருந்து இந்நிறுவனத்தின் ஆஸ்தான நிறுவனரான அஜய் சிங்கிற்கு மாற்ற ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஒப்பந்தம்
ஸ்பைஸ்ஜெட் நிர்வாம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பங்கு விற்பனை மற்றும் கொள்முதல் பத்திரத்தில் அஜய் சிங் மற்றும் கலாநிதி மாறன் தரப்பும் ஜனவரி 2015இல் கையெழுத்திட்டனர்.
சன் குரூப்
கலாநிதி மாறனின் சன் குரூப் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கே.ஏ.எல் ஏர்வேஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தன்வசம் இருந்த 58.46 சதவீத பங்குகளையும் அஜய் சிங்கிற்கு விற்றது.
இதன் பின் கலாநிதி மாறன் நிறுவனத்தின் 86 கோடி ரூபாய் முதலீடு செய்து நிறுவனத்தின் 10% சதவீத பங்குகளை மட்டும் பெற்றுக்கொண்டார்.
பிப்ரவரி மாதம்
இரு தரப்பு மத்தியிலான ஒப்பந்தம் ஜனவரி மாத்தில் செய்யப்பட்டாலும் பிப்ரவரி மாதத்தில் தான் பங்கு பரிமாற்ற பணிகள் நடைபெற்றது.
இந்தப் பரிமாற்றத்திலேயே விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதாகச் செபி அஜய் சிங் மீது குற்றம்சாட்டியுள்ளது.
நிர்வாகப் பொறுப்பு
பங்கு பரிமாற்றம், நிர்வாகக் கைமாற்றத்திற்குப் பின் பைஸ்ஜெட் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருந்து கலாநிதி மாறன், காவேரி மாறன் மற்றும் எஸ். நட்ராஜன் ஆகியோர் நிர்வாகக் குழுவில் இருந்து விலகிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications