எஸ்பிஐ ப்ரொபேஷ்னரி ஆபிசரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி என்றால் அது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எனப்படும் எஸ்பிஐ வங்கி ஆகும். இப்போது 5 துணை வங்கிகளுடன் இணைந்துள்ள எஸ்பிஐ உலகளவில் டாப் 50 வங்கிகள் பட்டியலில் விரைவில் இடம்பெறும் என்று கூறுகின்றனர்.
எஸ்பிஐ வங்கி எப்படி மிகப்பெரிய வங்கியோ அதே போன்று ப்ரொபேஷ்னரி அதிகாரி வேலைக்கு அதிகச் சம்பளத்தை அளிக்கின்றது.
ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தின் அப்பாவும் தங்களது பிள்ளைகளுக்கு ஒரு முறையாவது எஸ்பிஐ ப்ரொபேஷ்னரி அதிகாரி வேலைக்கு விண்ணப்பித்து முயற்சிக்குமாறு கூறியிருப்பார்கள்.
இந்த வேலையில் நல்ல மரியாதை, நிலையான மற்றும் அனைவரையும் கவரக்கூடிய சம்பளமும் அளிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் எஸ்பிஐ வங்கி 1000 கணக்கில் ஊழியர்களை ப்ரொபேஷ்னரி அதிகாரி பணிக்கு ஆட்கள் எடுக்கின்றது.
விண்ணப்பிக்க வயது வரம்பு
எஸ்பிஐ வங்கியில் ப்ரொபேஷ்னரி அதிகாரி வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்குப் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும். மேலும் விண்ணப்பிப்பவர்களின் வயது 21-30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதிக்கான காலம்
எஸ்பிஐ வங்கியில் ப்ரொபேஷ்னரி அதிகாரி வேலைக் கிடைத்துவிட்டால் தகுதிக்கான காலம் 2 ஆண்டுகள் அளிக்கப்படும். அதில் எழுத்தர் வேலை முதல் வங்கி நிர்வாகம் வரை அனைத்து வேலைகளிலும் பணியாளர்களின் செயல்பாடு சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
சரி, இப்போது எஸ்பிஐ வங்கியில் ப்ரொபேஷ்னரி அதிகாரி வேலைக்குச் சம்பளம் மற்றும் நன்மைகள் என்னென்ன என்று இங்குப் பார்ப்போம்.
சம்பள அளவீடுகள்
2016-ம் ஆண்டின் அறிவிப்பின் படி சம்பள அளவீடுகள் 23700-980/7-30560-1145/2-32850-1310/7-42020 ஆக இருக்கும். எஸ்பிஐ வங்கியில் ப்ரொபேஷ்னரி அதிகாரி வேலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள புதிய விதிகளின் படி 27,620 ரூபாய் அடிப்படை சம்பளமாக அளிக்கப்படும், பிறகு 4 முன்கூட்டிய சம்பள உயர்வும் உண்டு.
இதனால் மாற்றத்திற்குப் பிறகு எஸ்பிஐ வங்கியில் ப்ரொபேஷ்னரி அதிகாரி வேலைக்கான சம்பளம் இவ்வாராக இருக்கும்.
எஸ்பிஐ ப்ரொபேஷ்னரி அதிகாரி (ஜூனியர் மேலாண்மை தர அளவுகோல் 1)
அடிப்படை ஊதியம்: ரூ. 24,620
டிஏ: ரூ. 12,705 (அடிப்படைச் சம்பளத்தில் 46%, 2015-16 இன் டிஏ திருத்தப்பட்ட படி)
சிறப்பு உதவித்தொகை: ரூ. 2,140
பெருநகரம் ஈடுசெய்யும் கொடுப்பனவு
பெருநகரம் ஈடுசெய்யும் கொடுப்பனவு தொகையாக ரூ. 900 அளிக்கப்படும். இதனால் 4 சதவீதம், 3 சதவீதம் என வேலைக் கிடைத்த கிளை உள்ள இடங்களைப் பொருத்து மாறும்.
வீடு மற்றும் வாடகைப் படி
வீடு மற்றும் வாடைகைப்படி 8000 ரூபாய் கிடைக்கும். இதுவும் வேலைக் கிடைத்த கிளையைப் பொருத்து 9 சதவீதம், 7 சதவீதம் மாறும்.
மருத்துவ உதவி மற்றும் பிற நன்மைகள்
வரம்பில்லா மருத்துவ உதவித் தொகை, பொழுதுபோக்கு, செய்தித்தாள், பெட்ரோல், தொலைப்பேசி முதலியனவற்றுக்கு 4,500 ரூபாய், மற்றும் வீடு குத்தகை எடுக்கும் வசதியும் செய்து தரப்படும்.
மொத்த வருடாந்திர சம்பளம்
எஸ்பிஐ வங்கியில் ப்ரொபேஷ்னரி அதிகாரி வேலையில் சேர விரும்புபவர்களுக்குக் குறைந்தது 7.55 லட்சம் முதல் அதிகபட்சமாக 12.93 லட்சம் வரை பணிக்கு நியமனம் செய்யப்படும் இடத்தைப் பொருத்து கிடைக்கும்.
என்ன படிக்கும் போதே உங்களுக்கும் எஸ்பிஐ வங்கியில் ப்ரொபேஷ்னரி அதிகாரி வேலைக்கு விண்ணப்பிக்கத் தோன்றுகிறதா. அடுத்த முறை விண்ணப்பம் வந்தால் முயற்சி செய்து பாருங்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications