புதிய நிறுவனங்களுக்கு ஜாக்பாட்.. விண்ணப்பித்த 1 நாளில் பான் மற்றும் டான் கார்டுகள் கிடைக்கும்..!

புதிய நிறுவனங்களுக்கு ஜாக்பாட்.. விண்ணப்பித்த 1 நாளில் பான் மற்றும் டான் கார்டுகள் கிடைக்கும்..!

நிறுவனங்கள் நிரந்த கணக்கு எண்ணான பான் கார்டு மற்றும் வரி விதிப்பு கணக்கு எண்ணான டான் எண் பெற விண்ணப்பித்தால் வணிகத்தை ஊக்குவிக்கும் விதமாக ஒரே நாளில் அளிக்கப்படும்.

வணிகம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாகவும், எளிமையாக்கும் வண்ணமாகவும் மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் பெருநிறுவன விவகார அமைச்சகத்துடன் இணைந்து ஒரே நாளில் பான் மற்றும் டான் பெறும் முறையை அறிமுகப்படுத்துகின்றது.

எப்படி விண்ணப்பித்தால் உடனே பான் கிடைக்கும்?

எப்படி விண்ணப்பித்தால் உடனே பான் கிடைக்கும்?

பான் மற்றும் டான் எண்ணுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் பெருநிறுவன விவகார அமைச்சக இணையதளத்தில் உள்ள SPICe (INC 32) படிவத்தைப் பூர்த்திச் செய்து மத்திய நேரடி வரி விதிப்பு அணைதத்துக்கும் பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் மூலம் அனுப்பவேண்டும்.

பான், டான் மற்றும் சின்

பான், டான் மற்றும் சின்

இந்த முறையில் விண்ணப்பிக்கும் போது எந்தத் தலையீடும் இல்லாமல் பான் மற்றும் டான் எண் வழங்கப்படும். மேலும் இந்த முறையில் விண்ணப்பிக்கும் போது பான் மற்றும் டான் எண்ணுடன் நிறுவன அடையாள எண்(CIN)ம் உடனடியாகப் பெற முடியும் என்று நிதி அமைச்சாம் அறிவித்துள்ளது.

2017 மார்ச் மாதம் வரை மத்திய அரசு புதிதாக 19,704 பான் மற்றும் டான் எண்களை வழங்கியுள்ளது.

 

மார்ச் மாதம் வேகமாகப் பான் மற்று டான் எண் வழங்கப்பட்ட எண்ணிக்கை

மார்ச் மாதம் வேகமாகப் பான் மற்று டான் எண் வழங்கப்பட்ட எண்ணிக்கை

மார்ச் மாதம் 4 மணி நேரத்தில் பான் எண் வழங்கப்படும் என்ற அறிவித்த பிறகு 95.63 சதவீதம் அதிகரித்து 10,894 புதிய நிறுவனங்களுக்குப் பான் எண் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் டான் ஒரே நாளில் 99.73 விண்ணப்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலக வங்கி கோரிக்கை

உலக வங்கி கோரிக்கை

அதிக நிறுவனங்கள் துவங்கப்பட்டால் இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக என்றும், உலக வங்கி நிறுவனங்களின் பதிவு செய்தற்கான முறையை எளிமைப்படுத்த கோரிக்கை வைத்ததாலும் ஒரே நாளில் எளிதாகப் பான், டான், சின் பெறும் முறையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக் பான் கார்டு

எலக்ட்ரானிக் பான் கார்டு

மத்திய நேரடி வரி ஆணையம் இ-பான் எனப்படும் மின்னணு பான் கார்டு வழங்கும் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பான் எண் உருவாக்கப்பட்ட உடன் இ-பான் கார்டு உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

டிஜி லாக்கர்

டிஜி லாக்கர்

மின்னணு பான் கார்டினை எளிதாகப் பிற நிறுவனங்களுக்கு அடையாள அட்டையாகச் சமர்ப்பிக்கலாம் என்றும், டிஜிலாக்கரிலும் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+