மே 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை இந்த 5 நகரங்களில் மட்டும் தினமும் மாறும்..!
பொதுத் துறை நிறுவனங்கள் தினமும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்க நீண்ட காலமாகப் பேச்ச்சுவார்த்தை நடத்தி வருகின்றது என்று நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இப்போது அதை உறுதி செய்யும் விதமாக மே 1-ம் தேதி முதல் முதல் கட்டமாக ஐந்து நகரங்களில் மட்டும் இத்திட்டம் அமலுக்கு வருகின்றது.
5 நகரங்கள்
எரிபொருள் விலை தினம் மாற்றும் திட்டம் புதுச்சேரி மற்றும் வைசாக், உதய்பூர், ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் உள்ளிட்ட ஐந்து நகரங்களில் மே 1 முதல் தினமும் மாறும்.
தங்கம், வெள்ளி விலை போன்ற திட்டம்
தங்கம், வெள்ளி, ரூபாய் மதிப்பு போன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் இனி தினமும் பெட்ரோல் விலையை ஏற்றி இறக்கி இறவு 12 மணி முதல் அறிவிக்கும். இந்த விலை மாற்றம் உலகளாவிய எண்ணெய் விலையைப் பொருத்து மாறும்.
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள்
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களிடம் மட்டும் இந்தியாவின் 95 சதவீத எண்ணெய் சந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் நிலையங்கள் எண்ணிக்கை
மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களிடமும் இந்த இந்து நகரங்களில் இருந்து மொத்தமாக 200 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன.
சோதனை முயற்சி
முதலில் இந்து ஐந்து நகரங்களில் சோதனை அடிப்படையில் தினமும் பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கும் போது இத்திட்டத்தினை தேசிய அளவில் அமலுக்குக் கொண்டு வரும்போது உள்ள சிக்கல்கள் என்னென்ன என்று ஆராய்ந்து சரி செய்யப்படும்.
இது குறித்துத் தகவலை எண்ணெய் நிறுவனங்களிடம் கேட்க முயன்ற போது பதில் அளிக்க மருப்பு தெரிவித்துவிட்டனர்.
தனியார் எண்ணெய் நிறுவனங்கள்
தனியார் துறை எண்ணெய் நிறுவனங்களான ரிலையன்ஸ், ஷெல், எஸ்ஸார் ஆயில் நிறுவனங்களும் இந்த நகரங்களில் தினமும் மாற்றி அமைக்கும் முறையை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications