வாழ்க்கையில் வெற்றி பெற ஆங்கிலம் ஒன்றும் தடையில்லை என்று இங்கிலாந்தில் நிருபித்த இந்திய பெண்..!
இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்குச் செல்லும் போது ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் இங்கிலாந்தில் ஒரு கல்வியாளராக உயர்ந்தது மட்டும் இல்லாமல் ஆண்டின் சிறந்த ஆசிய பெண் தொழிலதிபர் பட்டத்தையும் பர்மிங்காம் விருது வழங்கும் விழாவில் இவர் பெற்றுள்ளார்.
மரியாதை
65 வயதான டேம் ஆஷா கெம்கா இப்போது மேற்கு நாட்டிங்ஹாம்ஷையர் கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி ஆவார். இவர் கல்வித்துறையில் எடுத்த முடிவுகள் மற்றும் திறன்களினால் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை ஆசிய வணிக விருதுகள் நிகழ்ச்சியில் விருது பெற்றுள்ளார்.
முடியாது என்று ஒன்று கிடையாது
ஆங்கிலம் தெரியாமல் இங்கிலாந்து சென்ற ஆஷா குழந்தைகள் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும், அங்குள்ள பிற குழந்தைகளின் அம்மாக்களுடன் பேசியே ஆங்கிலம் கற்றுக்கொண்டார்.
கல்லூரி விரிவுரையாளராரகப் பணிபுரிவதற்கு முன்பு இவர் கார்டிஃ பல்கலைக்கழகத்தில் வணிகப் பாடத்தில் பட்டம் பெற்றார், இப்போது மேற்கு நாட்டிங்ஹாம்ஷையர் கல்லூரியின் தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.
பிரகாசித்த பிறந்த ஆஷா
பீகார் மாநிலத்தில் உள்ள சீதாமார்ஹி மாவட்டத்தில் பிறந்த ஆசா 13 வயதில் தனது பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டார். அதுமட்டும் இல்லாமல் தனது 25 வயதில் கணவர் மற்றும் குழந்தையுடன் இங்கிலாந்து செல்லும் போது இவருக்கு ஆங்கிலமும் தெரியாது.
மிக உயர்ந்த விருது
2013-ம் ஆண்டுப் பிரிட்டிஷ் பேரரசு பிரட்டனின் மிக உயர்ந்த விருதான சிறந்த குடிமக்கள் விருதைப் பெற்றார்.
மிகவும் பெருமை!
மூன்று குழந்தைகளுக்குத் தாயான இவர் தான் 1931-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து சிறந்த குடிமக்கள் விருதைப் பெற்ற தார் மகாராணியான லட்சுமி தேவி பாய் சஹிபாவுக்கு அடுத்து இந்த விருதைப் பெற்றுள்ளார் என்பது இந்திய பெண்களுக்கு மிகவும் பெருமை பெறக் கூடிய ஒரு விஷயமாகும்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications